பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகில் கொண்டோர் உறுஉம் கொள்ளாத் துன்பம்" என்னும் அடிகளில் காண்கிறோம். g

உண்டியும் இனப்பெருக்கமும் மட்டுமே வாழ்வு என்பது விலங்கு நிலையாகும். மனித நாகரிகம் அந்த நிலையிலிருந்து வெகு தொலைவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. மனிதன் ஐம்பொறிகள்மூலம் அடையும் அறிவை ஒருமுகப்படுத்தி முன்கூட்டிச் சிந்திக்கும் பகுத்தறிவையும் வளர்த்துள்ளான். இத்தகைய அறிவின் தத்துவம், மனிதனுடைய உழைப்பின் மூலமும், செயலாற்றல் மூலமும் அனுபவத்தின் மூலமும் பெரும் அளவில் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. இவ்வறிவை மனித நலனுக்கும், மனித முன்னேற்றத்திற்குமாகப் பயன்படுத்த வேண்டுமென்பதற்காக நமது இலக்கியங்கள், சாத்திரங்கள், அறநூல்கள் பெரும்பங்கை ஆற்றி வந்துள்ளன. பெண்டிரும் உண்டியும் மட்டுமே இன்பமென்று கருதி அதில் மூழ்குபவர்கள் துன்பமே அடைவார்கள் என்பதைக் கோவலன் வாயிலாக இளங்கோவடிகள் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கற்புடைப் பெண்டிர் உள்ள நாட்டில் வான மழை பொய்க்காது, நாட்டு வளம் குன்றாது, அரசர்களின் ஆட்சி சிதையாது என்னும் கருத்தில்

"வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணfல வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” என்று காப்பியக் கவிதை அடிகள் குறிப்பிடுகின்றன.

கற்பு நிலை, புலனடக்கம்பற்றியெல்லாம் நமது நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. பாரத சமுதாயத்தின் பண்பாட்டுத் தளத்தில் குடும்ப அமைப்பு ஒரு முக்கியமான அடித் தளமாகும். இல்லறத்திற்கு நமது இலக்கியங்கள் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இல்லறத்திலும் குடும்ப அமைப்பிலும் ஆண், பெண் இருபாலாருக்கும் சமமான பொறுப்புகளையே நாம் கூறிவந்துள்ளோம். கற்பு நிலைக்கு இராமனும் சீதையும், புலனடக்கத்திற்குப் பரதனும்