பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 97

“ கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி

வேத்தியல் இழந்த வியனிலம் போல" என்று அத்தகைய நாட்டைக் கோடை காலத்துச் சூரியன் நிலத்தைச் சுட்டெரிப்பது போலாகும் என்று இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார்.

அந்தச் சூரிய வெப்பம் காரணமாக முல்லையும் குறிஞ்சியுங்கூடத் தமது இயல்பான வளம் கெட்டுப் பாலையாகிவிடுகின்றன என்னும் மிகவும் ஆழ்ந்த கருத்தை இங்கு அடிகளார் நமக்கு வெளிப்படுத் துகிறார்.

உயர்ந்த நற்குணங்களைக்கொண்ட மேலோராயினும், பல நூல்கள் கற்றறிந்த நூலறிவுடையோர்களாயினும், நல்லவை தீயவை என்னும் வேறுபாடுகளை நன்கு தெரிந்தவர்களாயினும் கணிகையருடன் சென்று வாழ்வதைப் பிணி எனக் கருதி விலகிச் செல்வார்கள் என்னும் கருத்தில்

" மேலோ ராயினும், நூலோ ராயினும்

பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மென” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்யும் நாட்டில் வாழும் மக்கள், அம்மன்னனின் வீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்கள் என்னும் கருத்தில்,

' கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுங்கதிர் அமையப் பார்த்திருந் தோர்க்கு" என்று குறிப்பிட்டு, அதைப் போலக் கொடிய வெயிலைக் கொளுத்தும் சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்று அடிகளார் கூறியிருப்பது சிறந்த உவமையாகும்.

பெண்டிரும் உண்டியுமே இன்பம் என்று கருதி வாழ்வோர்கள் முடிவில் துன்பத்தையே அடைவார்கள் என்னும் கருத்தை