பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கண்ணகியும் இருள் இருக்கும் அதிகாலை நேரத்திலேயே புகார் நகரை விட்டு வெளியேறிவிடக் கருதிப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அவ்வாறு செல்லும்போது:

புலவூண் துறந்து பொய்யா விரதத்து அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழிஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்து"

வந்து அதை வலம் வந்து வணங்கிச் சென்றனர் என்று. காப்பியக் கவிதை அடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வடிகளில் சமணம் போதிக்கும் புலால் உணவைத் துறத்தல், பொய்யாமை என்னும் விரதத்தை மேற்கொள்ளல், அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவற்றைக் கைவிடல் முதலிய ஒழுக்க நெறிகளை மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்.

" அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்ற தறம்"

என்பது ஐயன் வள்ளுவர் வாக்காகும்.

சமணமும் புத்த மும் போதித்த பல ஒழுக்க நெறிமுறைகளும் இன்று பாரதம் முழுவதினுடைய பொதுப் பண்பாட்டின் பகுதியாக இணைந்து இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

அரசியலில் அரசனும், அவனுக்குத் துணையாக அமைச்சர் முதல் ஆட்சி நிர்வாகத்தின் பல வேறு பொறுப்பில் உள்ளவர்களும் இணைந்து கருத்தொற்றுமை யுடன் பணியாற்ற வேண்டும். இதில் மாறுபாடுகள் ஏற்பட்டு அவரவர்கள் விருப்பத்திற்கு இஷ்டம்போலத் தங்கள் தங்கள் போக்கில் செயல்படுவார்களானால் அந்த நாடு கெட்டு விடும். இந்தக் கருத்து இப்போதைய ஜனநாயக முறைகளுக்கும் பொருந்தும் ஆட்சியில் அரசிய்ல் கட்சிகளில் பொறுப்பில் உள்ளவர்கள் நாட்டின் மொத்த நலன் கருதி இணைந்து இசைவாகச் செயல்பட வேண்டும். இல்லா விட்டால்,