பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 101

"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதும்

கறைப்படு மாக்கள் கறைவிடு செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென யானை யெருத்தத் தனிமுரசு இரீஇக் கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்" என்று காப்பியம் கூறுகிறது.

பரிசுப் பொருள்களும் புதையல் பொருள்களும் அரசைச் சேரும் என்னும் நியதியைப் பாண்டிய மன்னன் மாற்றி, அவை உற்றவர்க்கே உரியனவாகும் என்று புதிய நியதியை ஏற்படுத்தினான் என்று ஒர் அரிய அரசியல் செய்தியை இங்கு நாம் அறிகிறோம்.

வடபுலம் படையெடுத்து, வெற்றி வாகை சூடி, கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவன், சோழனும் பாண்டியனும் இகழ்ந்து பேசியதைக் கேட்டுச் சினம் கொண்டு பேசியபோது மாடல மறையோன் சேரனிடம் வணங்கி,

"வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு

ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கனும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை" என்று கூறி அரசனுடைய சினத்தைத் தணித்துப் போர்க் குனத்தை நிறுத்தி அறவேள்வி செய்யுமாறு வேண்டுகிறான். யாக்கை நில்லாது, செல்வம் நில்லாது, இளமை நில்லாது என்பதைச் சேரமன்னர்களின் பாரம்பரியப் பெருமைகளையும், சேரன் செங்குட்டுவ னின் அனுபவங்களை யும் நினைவுபடுத்தி,

"நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்

அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்" என்று எடுத்துக் கூறி, போர்க்கள வேள்வியை நிறுத்தி அறக்கள வேள்வியைச் செய்ய ஏவினான். அதன்படி சேரன் செங்குட்டுவனும் அறவேள்வி செய்து, சிறை வைக்கப்பட் 1 ருந்த அரசரை விடுவித்துக் கண்ணகி தெய்வத்திற்குக் கோவில் பிரதிஷ்டை செய்தான்.