பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இங்குப் போர்க்கள வேள்விகளை நிறுத்தச்செய்து சாந்தி வேள்வியைச் செய்யத் துண்டுவது மிக முக்கியமான அரசியல் நெறிபற்றிய கருத்தாகும்.

மேலும், மாடல மறையோன் வாயிலாகப் பல நல்லுரைகள் எடுத்துக் கூறப்படுவதைக் காணலாம்.

"நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே தொன்றியல் வாழ்க்கை." நல்லறம் செய்தோர் நற்கதியடைவார்கள் என்பதும், ஒருவரிடம் பற்றுவைத்தோர் அப்பற்றின் காரணமாக மீண்டும் அவர்கள் சேர்ந்து பிறத்தலும், மறுபிறப்பிலும் அவர்கள் சேர்ந்து அன்புடன் இருப்பதும், நல்வினைப் பயன்கள் அவர்களிடம் சேர்வதும், தீவினைப் பயன்களும் அவைகளைச் செய்தோரிடம் சேர்வதும், பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் புதியதன்று, தொன்று தொட்டே நடப்பதாகும் என்னும் தத்துவக் கருத்துகளை மாடல மறையோன் எடுத்துக் கூறுகிறார். அதன் மூலம், நல்லறங்களும் நல்வினைகளும் செய்ய வேண்டும் என்பதும் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது, அறிவுறுத்தப்படுகிறது.

முடிவாக, இளங்கோவடிகளாரின் அறவுரைகளுடன் நூல் நிறைவு பெறுகிறது. இந்த அறவுரைகள் காப்பியத்தின் நோக்கமாகக் காண்கிறோம். அவை மிகச்சிறந்த இலக்கியமாக அமைந்துள்ளன. சமணத்தின் முக்கியமான கருத்துகள் அவற்றின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. அத்துடன் அவை பாரதப் பண்பாட்டின் பொதுக் கருத்தாகச் சங்கமமாகிவிட்டன.

"என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி

தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்

பரிவும் இடுக்கனும் பாங்குற நீங்குமின் தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்