பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருமோகூர்ப்பெருமானைச் சரணடைந்தால், "இடர்கெட எம்மைப் போந்தளி யாய்என் றேத்தி

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர்கொள் பாம்பனைப் பள்ளிகொள் வான்திரு மோகூர் இடர்கெட அடிபரவுதும் தொண்டீர் வம்மினே" என்றும்,

"துயர்கெ டும்கடிது, அடைந்துவந் தடியவர் தொழுமின்

உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடையவல் லரக்கர்புக் கழுந்த தயர தன்பெற்ற மரகத மணித்தடத் தினையே’ என்றும் திருமோகூர்ப்பிரானை யடைந்தால் இடர்கள் கெடும், துயர்கள் கெடும் என்று ஆழ்வார் பாடுகிறார்.

திருவனந்தபுரம் சேர்ந்தால், "கெடும்இட ராய வெல்லாம் கேசவா என்ன நாளும்

கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்ப லற்றும் தடமுடை வயல்அ னந்த புரநகர் புகுதும் இன்றே" என்று தொடங்கி, "திரும் நோய்வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்” என்றும், "கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை" என்றும் "மாய்ந்தறும் வினைகள் தாமே மாதவா" என்றும் நம்மாழ்வார் பாடுகிறார்.

"பணிநெஞ்சே, நாளும் பரமபரம் பரனை

பிணியொன்றும் சாரா, பிறவிகெடுத் தாளும் மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான் அணிநின்ற செம்பொன் அடலாழி யானே" என்றும் மனமுருகப் பாடுகிறார்.

திருநாடு செல்வோருக்கு நடைபெறும் உபசாரங்கள் பற்றி,

"விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும்நற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே" என்றும் நம்மாழ்வார் பாடுகிறார்.