பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 121

ஆழ்வார் தமது பரம பக்தி மூலம் திருமாலை அ ைந்ததாக அருளி,

"சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ

சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ ! சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான இன்ப மேயோ ! சூழ்ந்த தனில்பெரிய என்அவா அறச்சூழ்ந் தாயே!” . .ன்று ளம் கனிந்து பாடுகிறார். பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் அருளிச்செய்த திருவந்தாதிப் ல்கள் முழுவதும், பக்திச் சுவையும், தத்துவ ஞான ஆளியும், வாழ்க்கை நெறிமுறைகளும் மனிதாபிமானப் பற்றும் நிறைந்த மிக அருமையான பாடல்களாகும். "வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெப்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யான்அடிக்கே சூட்டினென்சொன் மாலை இடராழி நீங்குகவே என்று” உலகத்தையே திரியாகவும், பெருங்கடல் நீரையே நெய்யாகவும், வெம்மை மிக்க கதிரோனையே விளக்காகவும் வைத்து உலகின் இடர்கள், துன்ப துயரங்கள் நீங்குவதற்காக ஒளிமிக்க ஆழியானின் திருமாலின் அடிகளுக்குப் பாமாலை சூட்டினேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

இயற்கையோடிணைந்து உலகையும் கடலையும் ஞாயிற்றையும் இணைத்து உலகின் உயிர்களெல்லாம் இடரின்றி வாழ, வளர ஆழ்வார் மனம் நிறைந்து விசாலமான உள்ளத்துடன் தமது இனிய பாடல்களைத் தொடங்கு வதைக் காண்கிறோம்.

"இயல்வாக ஈன்துழா யான்அடிக்கே செல்ல

முயல்வார் இயல்அமரர் முன்னம் - இயல்வாக நீதியால் ஒதி நியமங்க ளால்பரவ ஆதியாய் நின்றார் அவர்” என்று நீதியையும் நியமங்களையும் சுட்டிக்காட்டுகிறார். நீதியால் ஒதி, நியமங்களால் பரவி, ஆதியாக நிற்கிறான் துழாயான் என்று ஆழ்வார் மிக நுட்பமான ஆழ்ந்த கருத்துகளைத் தமது பாடலில் குறிப்பிடுகிறார்.