பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"தேசும் திறலும், திருவும் உருவமும்,

மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில் வலம்புரிந்த வான்சங்கம் கொண்டான்பேர் ஒத நலம்புரிந்து சென்றடையும் நன்கு" என்றும் பாடுகிறார்.

இந்த நலன்களெல்லாம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

"அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்

செறிவென்னும் திண்கதவம் செம்மி - மறையென்றும் நன்கோதி நன்குனர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி”

இங்கு அறிவு, ஐம்புலன், செறிவு - அஃதாவது கருத்துச் செறிவு - நான்மறைகள் மற்றும் இதர அறிவுச் செல்வங்கள், அவைகளைப் படிப்பது, புரிந்துகொள்வது ஆகிய பணிகளைப்பற்றி மிகவும் சிறப்பாகச் சிறந்த உவமைகளுடன் இணைத்து ஆழ்வார் மிகவும் நன்றாக எடுத்துக் கூறுகிறார்.

"ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து

பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம்" என மனத்தை ஒருமுகப்படுத்தி, ஐம்பொறிகளையும் அடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பையும் தவிர்க்கலாம் என்று ஆழ்வார் கூறுவதைக் காணலாம்.

“உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி

வைத்தவனை நாடி வலைப்படுத்தேன் - மெத்தெனவே நின்றான் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்துப் பொன்றாமை மாயன் புகுந்து" என்று ஆழ்வார் பாடுகிறார்.

"அவர், இவர் என்றில்லை அனங்கவேள் தாதைக்கு, எவரும் எதிரில்லை கண்டீர்” என்றும், "ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்' என்றும், "அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கின்பாவாய் எல்லாமும் நீயாவாய்” என்றும், "இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல - நல்லறம் ஆவனவும், நால்வேத மாத்தவமும்