பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 131

"ஆபெனக் கின்று நிகர்சொல்லின் மாயன்அன் றைவர்தெய்வத்

தேயினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப் பயினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்.நல்லோர் *பி.விற் சென்று பணிந்ததுஎன் ஆவியும் சிந்தையுமே” என்று பாடுகிறார். 'ப்கொண்டு பேரறம் செய்துநல் வீடு செறிதும்என்னும்

பாப்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்உன் பதயுகமாம் வப்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார்கொண்ட வண்மை இராமா னுசஇது கண்டுகொள்ளே” என்று "எந்த மோட்ச வீட்டையும் நான் விரும்பவில்லை. இராமானுசரே உன் காலடி வீடு எனக்குப் போதும். அதை நான் எளிதில் அடைய முடியும்” என்று குறிப்பிடுகிறார். "கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலை உண்டுதன் உள்ளம் தடித்து.அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன்மறை வாதியராம் புலிமிக்க தென்று.இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே." என்றும், "இன்புற்ற சீலத்தி ராமா னுச!என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன் றுண்டுஉன்

தொண்டர்கட்கே அன்புற் றிருக்கும் படிஎன்னை யாக்கியங் காட்படுத்தே!” என்றும் போற்றித் தம்மை ஆட்படுத்தும்படி வேண்டுகிறார். ஆழ்வார்கள் தங்கள் அரிய நெறிதரும் செந்தமிழ்ப் பாசுரங்கள் மூலம் மனித வாழ்க்கைக்குரிய சீரிய அற நெறி முறைகளை வகுத்துக் கூறியுள்ளனர். சிறந்த அறிவுரைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆழ்வார்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் ஏற்பட்ட சில தவறுகளையும் குறைபாடுகளையும் களைந்து, சிறந்த பக்தியும் ஞானமும் பெற்று, மனித வாழ்க்கைக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர்.

பக்தி மார்க்கத்தில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து, இலட்சோபலட்சம் மக்கள் திரளும் பெரும்