பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

நெற்றியில் சிவந்த சுட்டினையுடைய காளையை அடக்கியவனுக்கே இப்பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள் உரியனவாகும்.

3. "மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்

முல்லையம் பூங்குழல் தான்” வலு மிக்க இந்த இளைய காளையை அடக்கி அதன்பதுே ஏறி ஒட்டுபவனுக்கே இம்முல்லை மலரைச் சூடிய பூங்குழலாள் உரியவளாவாள்.

4. "நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகும்.இப்

பெண்கொடி மாதர்தன் தோள்' நுண்ணிய புள்ளிகளைக்கொண்ட இந்த வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கே இப்பெண் கொடியின் தோள்கள் உரியனவாகும்.

5. "பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகும்.இந்

நற்கொடி மென்முலை தான்” அழகிய பொன் போன்ற மஞ்சள் நிறப் புள்ளிகளை யுடைய இந்த வெள்ளைக் காளையை அடக்கியவனுக்கே இவ்வழகிய நல்ல கொடி போன்றவளின் மென்முலைகள் உரியனவாகும். *

6. "வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியள்.இக்

கொன்றையம் பூங்குழ லாள்" வெற்றி மிக்க இவி விளங் காளையை அடக்கிச் செலுத்துபவனுக்கே இக்கொன்றைப் பழம் போன்ற அழகிய நிறத்தையுடையவள் உரியவளாவாள்.

7. “துளநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப்

பூவை புதுமல ராள்” து.ாய வெள்ளை நிறம் கொண்ட இக்காளையை அடக்கியவனுக்கே இக்காயாம்பு மலரைப் போன்ற நிறத்தையுடையவள் உரியவள் ஆவாள் என்றெல்லாம் விவரித்துச் சிலப்பதிகாரக் காப்பியம் அழகுபடக் குறிப்பிடுகிறது. --

ஆடல், பாடல், இசை, இசைக்கருவிகள், இசைப் பெயர்கள், தாளம், அரங்கம், களம் முதலியவைபற்றிக்