பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 155

க. தும் ஆடல் பாடல்களும் நடைபெறும்போது (வெங்கோவடிகள் மிகவும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

"ஆங்கு

தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதையார் என்றுதன் மகளை நோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளி வர்க்குப் படைத்துக்கோள் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழையிளி விளரி தாரம்என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே மாயவள் என்றாள் குரலை விறல் வெள்ளை ஆயவள் என்றாள் இளிதன்னை ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை மாயவள் சீருளார் பிஞ்ஞையும் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரிதான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள் கொண்டசீர் வையம் அளந்தான் தன்மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள் நப்பின்னை தானாம் என்றே ஐயென்றாள் ஆயர்மகள்" என்று இளங்கோவடிகளார் தமது இனிய காப்பியத்தில் குறிப்பிடுகிறார்.

குரவைக் கூத்து ஆடத் தொடங்குவதற்குத் தயாரிப்பாக அந்த ஏழு மகளிருக்கும் அவர்களுடைய உரிய பெயர்களுக்குப் பதிலாக அவர்களுக்கு இசைப்பெயர்களைச் சூட்டி, வேடம் கட்டி ஆடத் தொடங்குவர். இதுபற்றி இளங்கோவடிகள் மிகவும் விரிவாகச் சிறப்பித்துக் கூறுவதைக் дѣтsoотsuгтt b.