பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அந்த ஏழு பெண்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று புனைபெயர் சூட்டினாள் மாதரி. இந்த ஏழு பெயர்களும் யாழிசை நரம்புகளின் பெயர்களாகும்.

இவற்றுள் குரல் நரம்பின் பெயரைக் கொண்டவள் மாயவன். இளி நரம்பின் பெயரைக் கொண்டவள் பலராமன். துத்த நரம்பின் பெயரைக் கொண்டவள் நப்பின்னை நங்கை மற்றவர்களும் அவரவர்களுக்குரிய இடத்தில் வரிசைப்படி நின்று கைகோத்துக்கொண்டனர்.

அந்த எழுவருள் மாயவன் வேடத்தில் உள்ளவளின் கழுத்திலே வளமான துளசி மாலையை நப்பின்னை வேடம் கொண்டவள் சூட்டினாள். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் கை கோத்துக்கொண்டு ஆடத் தொடங்கினர். இந்தக் காட்சி ஒர் அற்புதமான காட்சியாகும். இந்த அழகிய காட்சியைப்பற்றிக் குறிப்பிடும்போது கொண்டசிர் வையம் அளந்தான் தன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள் நப்பின்னை தானம் என்றே ஐயென்றாள் ஆயர் மகளிர்” என்று மிகுந்த சிறப்பினைக் கொண்ட இவ்வுலகையே ஈரடியால் அளந்த திருமால் தனது மார்பிலே இருக்கும் இலக்குமியைக்கூட நோக்காமல் இருப்பதற்குக் காரணம் நமது அழகுமிக்க நப்பின்னைதான் போலும் என்று ஐயை வியப்படைந்து கூறியதாக மிக அழகாகக் காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. ஆடத் தொடங்குதல்

"அவர்தாம்

செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடல்சீர் ஆய்ந்துளார் முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென்றாள் 5TETT அது

"குரல்மந்த மாக இளிசம னாக

வரன்முறையே துத்தம் வலியா - உரன்இலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்

பின்றையைப் பாட்டெடுப் பாள்"