பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 15

==

நாட்டில் (சேர மண்டலம்) 14-ம் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22-ம், வடநாட்டுத் திருப்பதிகள் 1-ம் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கைப் பிரிவுகளில் சிறிய சில வேறுபாடுகள் கூறப்பட்டபோதிலும் திவ்யப்பிரபந்தத்தின் கணக்குப்படி மேலே குறித்துள்ள எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்குப்படி 108 திருப்பதிகளுள் 74 திருப்பதிகள் சேர சோழ பாண்டிய மண்டலங்களிலே இடம் பெற்றுள்ளன. ஆழ்வார்கள் தமிழ்நாட்டை அடித்தளமாகக் கொண்டு பாரத நாடு முழுவதையும் இமயம் முதல் குமரி வரை ஒரே நாடாகவே சிந்தித்திருக்கிறார்கள்.

இளங்கோவடிகளின் காலத்தில் தொண்டை மண்டலத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட பல்லவர் ஆட்சி அமைந்திருக்கவில்லை. அவர் சங்க காலத்திய மூன்று தமிழ் அரசுகளைப்பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்திய வரலாற்று ஆசிரியர்கள் பல்லவ அரசைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆழ்வார்கள் தொண்டை மண்டலத் திவ்ய தேசங்களைப்பற்றியும் பாடியுள்ளார்கள். சிலப்பதிகாரத் திலும் மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தையும், திருமாலிருஞ்சோலையையும் குறிப்பிடுவதுடன் திருவேங்கடத்தைப்பற்றியும் குறிப்பிடுகிறான். திருவனந்தபுரம் பற்றிய குறிப்பும் காப்பியத்தில் காணக்கிடக்கிறது. இது ஒரு சிறிய குறிப்பேயானாலும் இங்கும் சோழ நாடும் (திருவரங்கமும்), பாண்டிய நாடும் (திருமாலிருஞ்சோலை), திருவேங்கடமும் (தொண்டை மண்டலம்), சேரநாடும் (திருவனந்தபுரமும்) சேர்ந்து காப்பியத்தில் குறிக்கப்பட் டிருப்பதைக் காண்கிறோம்.

ஆழ்வார்கள் தாங்கள் பாடியுள்ள திவ்ய தேசங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அந்தத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள திருமால் வடிவங்களின் பெருமைகளுடன் அந்தத் திருத்தலங்களின் பெருமைகள், அவைகளின் நீர்வளம், நிலவளம், விருட்சங்கள், தாவரங்களின் பெருமை, அந்தத் திருத்தலங்களைச் சுற்றியுள்ள காட்சிகள், அவை அமைந்துள்ள நாடுகளின் சிறப்புகள், ஆறுகள், மலைகள்,