பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 199

தனியன் "வையத்து அடியவர்கள் வாழ அருந்தமிழ் அந்தாதி பாடி படி விளங்கச் செய்தான்” எனக் குறிப்பிடுகிறது. ஆழ்வார்கள் பெரும்பாலும் தங்களுக்காக மட்டுமல்லாமல் அடியார்கள் வாழவும், உலகம் உய்யவும், திருமாலை வழிபட்டுப் பாடியுள்ளார்கள். அதனால் அவர்களுடைய பாடல்கள் மக்கள் மனத்தில் பதிந்து

வியிருக்கின்றன என்பதைக் காண்கிறோம். "வையம் தகழியா, வார்கடலே நெய்யாக, வெப்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே என்று” பொய்கையாழ்வார் தமது திருவந்தாதிப் பாடல் வரிசையைத் தொடங்குகிறார். -

சூரியனை விளக்காகவும், இந்த உலகத்தைத் திரியாகவும், ல் நீரை நெய்யாகவும் வைத்து உலகத்தின் துன்பங்கள் தீர்வதற்காகச் சுடராழியானான திருமாலுக்குப் பாமாலை கட்டி யதாக ஆழ்வார் குறிப்பிடுவதைக் காணலாம்.

இன்னும், பொய்கையார் திருமால் வழிபாட்டுடன் இணைத்து ஐம்புலன்களையும் அடக்கி ஒருமுகப்படுத்தும் அறிவாற்றலைப்பற்றியும், அரியும் அரனும் ஒன்றே யென்றும், ஐம்பூதமும் ஐம்புலனும் அவியாத ஞானமும் வேள்வியும் (கடும் முயற்சியும்) நல்லறமும் திருமாலின் இயல்பு என்றும், நீதியால் ஒதி நியமங்களால் பரவி ஆதியாய் நின்ற திருமால் என்றும், குன்றனைய குற்றம் செய்தாலும், அவைகளைக் குணமாகக்கொண்டு ஆண்டருளும் ஆழியான் - அதாவது, குற்றம் செய்வோரைத் திருத்தி அவரை நல்லவராக்கி அருளும் ஆழியான் - திருமால் எனவும், மனத்தின் மாசுகள் திரும், தீவினைகள் சாரா, செல்வங்கள் கூடும் திருத்துழாய் மாலை வழிபட்டால் என்றும், தீவினைகள், அல்லல், நோய், பாவம் ஆகியவை தீரும், திருமால் அடிசேர்ந்தால் என்றும், பிறர் பொருளை விரும்பேன், கீழோரோடு உறவு கொள்ளேன், உயர்ந்தவரோடுதான் சேர்வேன், அதற்கு வழிகாட்டும் திருமாலே எனது தெய்வம் எனவும், உல.