பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும

வழக்கையும் உலக வாழ்க்கையையும் இணைத்து ஆழ்வார் பெருமான் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார்.

முதலாழ்வார்கள் மூவருள் பூதத்தாழ்வார் நடுநாயகமானவர். இவர் மாமல்லபுரம் என்னும் திருக்கடல் மல்லையில் மாதவிப் பந்தரில் பூத்த குருக்கத்தி மலரில் அவதரித்தவர்.

பூதத்தாழ்வார், அன்பைத் தகழியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், இன்பம் உருகும் சிந்தனையை இடுதிரியாகவும் வைத்து ஞானச்சுடர் விளக்கை ஞானத் தமிழால் திருமாலுக்கு ஏற்றி வைத்துள்ளதாகத் தமது திருவந்தாதியைத் தொடங்கிப் பாடுகிறார்.

"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்" என்பது அவருடைய முதலாவது பாடல்.

பூதத்தாழ்வார் ஞானத்தமிழ் புரிந்தவர். அந்த ஞானத்தால் நன்குனர்ந்து நாரணன் பேர் சாற்றுகிறார். மற்றவர்களையும் அதற்காக அழைக்கிறார். எல்லோரையும் திருமால் புகழ் பாடும்படி வேண்டுகிறார். பாற்கடலான் பாதம்புரிவார் புகழ் பெறுவார் என்றும், எண்டிசையும் பேர்த்த கரம் நான்குடையான் பெயரை மக்கள் அனைவரும் ஒதவேண்டும் என்றும், வழுவின்றி நாரணன் நாமங்களை நன்குணர்ந்து நன்கேத்தி நல்வாழ்வு பெருக என்றும், தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளாய் வாழ்ந்து கழிவாரை ஞானம் அளந்த திருமால் வாழ்விப்பார் என்றும், திருமால் பெருமையை விரும்பினால் அனைவருக்கும் சேமம் உண்டாகும் என்றும், திருமங்கை நின்றருளும் தெய்வத்தை உங்கள் நாவால் வாழ்த்தும் கடமையைக் கடைப்பிடியுங்கள் என்றும் பூதத்தாழ்வார் பாடுகிறார்.

பேயாழ்வார் சென்னையிலுள்ள மயிலையில் ஒரு கிணற்றிலிருந்த செவ்வல்லிப்பூவில் அவதரித்ததாக ஐதீகம்.