பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருவாய்மொழிப் பாசுரங்கள் பக்திச் சுவையும், தமிழ்ப் சுவையும் இசையின்பமும் மிக்கவையாகும். திருமால் வழிபாட்டில் திருவாய்மொழிப் பாசுரங்கள் தனித்தன்மை கொண்டவைகளாகும்.

“உயர்வற வுயர்நல முடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அருளினன் எவனவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன், துயரறு சுடரடி தொழுதெழன் மனனே!" என்று அற்புதமான ஒரு பாசுரத்தை முதல் பாடலாகக் கொண்டு திருவாய்மொழியின் முதல் பத்துப் பாசுரங்கள் தொடங்குகின்றன.

திருமாலே அனைத்து உயிர்களும், திருமாலே எல்லா நலன்களும் உடையவன், எல்லாமாய் நிற்பவன், எங்கும் நிறைந்தவன், எல்லாக் காலங்களிலும் எல்லாப் பொருள்களிலும் இருப்பவன் என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்.

பத்துடையடியவர்க்கெளியவன், பிறருக்கரிய வித்தகன், மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் என்றும், பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் லாதியம் பகவன் என்றும், ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் என்றும், துயக்கறு மதியில் நல்ஞா னத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் எனவும் திருமாலை வழிபட்டுப் பாடுகிறார். திருமாலிடம் துது செல்லும்படி நாரைகளையும், குயில்களையும், அன்னங்களையும், நன்னிலப்பட்சிகளையும், வண்டுகளையும், கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளை யும் வேண்டுகிறார். தம்மைத் துன்புறுத்தாதிருக்குமாறு குளிர் காற்றை வேண்டுகிறார்.

கண்ணன் என்னைச் சுற்றியுள்ளான், அருகில் வந்தான், என்னுடன் கூடிநின்றான், எனது இடுப்பில் அமர்ந்தான், உள்ளத்தில் புகுந்தான், தோளில் தங்கினான், நாவில் வந்து அமர்ந்தான், கண்ணுக்குள் நின்றான், நெற்றியில் இருந்தான்,