பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 19

பதகாரக் காப்பியத்தில் மக்களுக்கு நல்வழி காட் டும் சிறந்த கருத்துகளைக் கதைப்போக்கிலும் மாடல மறையோன் போன்ற சிறந்த, கற்றறிந்த மேலோன் மூலமும் ..வி வாக்காகவும் நாம் அறிகிறோம். அவையெல்லாம் காலத்தை வென்ற சிறந்த கருத்துகளாகும்.

ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப் பாடல்கள் சிறந்த ..தி நெறிகளையும் தத்துவ ஞானக் கருத்துகளையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் இயற்கைச் சக்திகளின் பயன்பாடான செயல்முறைகளையும்பற்றித் தெளிவுபடுத்தி விளக்கிக் கூறுகின்றன.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காப்பியத்தை (புதிய காலமும், திவ்யப்பிரபந்தப் பாடல்களை ஆழ்வார்கள் பாடிய காலமும் மிக முக்கியமாகக் கவனத்தில் .ெ ஸ் எ வேண்டிய ஒன்றாகும். பொதுவாகத் தமிழ் (;)..பக்கியங்கள் இலக்கணங்கள் தோன்றிய காலம்பற்றி, அவை எழுதப்பட்ட காலம்பற்றிப் பல வேறு கருத்துகளும் பத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. அவைபற்றி இன்னும் |lவினமான வழிமுறைகளில் ஆதாரங்களுடனும் தக்க மன்றுகளுடனும் ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அவைபற்றி வெறும் தன்னிலை உணர்வு பட்டும் போதாது.

தமிழ் மொழி இந்திய மொழிகளுள், மிகவும் தொன்மையான மொழிகளுள் ஒன்று என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழ் மொழி வரலாற்றில் முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறப்படும் காலங்கள், அகத்தியம், தொல்காப்பியம் முதலான பழைய இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கியத்திற்கு வலுவூட்டிய காலம், சங்க இலக்கியங்கள் தோன்றி வளர்ந்துள்ள காலம்பற்றியெல்லாம் மேலும் அதிகமான ஆய்வுகளும், இன்று பலராலும் கூறப்படும் பல வேறு கருத்துகளுக்குத் தக்க ஆதாரங்களும், அகச்சான்றுகளும் புறச் ான்றுகளும் இன்னும் தெளிவாகத் தேவைப்படுகின்றன. இப் பணிகளில் தற்காலத்தில் பல வேறு அமைப்புகளும்