பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கொண்ட, வேலேந்திய வீரம் படைத்த சேர மன்னனுடைய சிறப்பைக் கேள்வியுற்றான். "வளமான தமிழ் அறிந்த மறையோருக்கு நிறைவான வாழ்வு கொடுத்துக் கொடைச்சிறப்புக் கொண்ட உதியன் சேரலாதனைக் கான விரும்பிக் காடு, நாடு, ஊர்கள் கடந்து சேரனது அரண்மனையை அடைந்தான்” என்று பாண்டிய நாட்டின் சிறப்புகளைக் கூறுகையில் சோழநாட்டின் பெருமைகளையும் சேரநாட்டின் புகழையும் சேர்த்து விவரித்து இளங்கோவடிகளார் கூறுகிறார்.

சேரனுடைய தலைநகரில் இருந்த வேத விற்பன்னர் களிடம் வாதிட்டுப் பராசரன் தனது திறமையைக் காட்டி வெற்றி கண்டு சிறந்த பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டு செங்கோல் தென்னவன் ஆட்சியின்கீழ் இருந்த மறையவர் வாழும் திருத்தண்கால் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு ஒரு மரத்தடியில் தனது பரிசு மூட்டையை வைத்து இளைப்பாறினான்.

அப்போது அங்கு சில பிராமணக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். பராசரன் அவர்களிடம், "என்னோடு இணையாக உங்களுள் யாராவது வேதம் ஒதினால், அவர்களுக்கு இப்பரிசிலைக் கொடுப்பேன்" எனக் கூறினான். அக்குழந்தைகளுள் தக்கினாமூர்த்தி என்னும் சிறுவன் முன்வந்து பராசரனுக்கு ஈடாக வேதம் ஒதினான். பராசரன் மிக்க மகிழ்ச்சியடைந்து தனது பரிசில் பொருள்களை அச்சிறுவனுக்குக் கொடுத்தான். அச்சிறுவன் அப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு தன் பெற்றோரிடம் கொடுத்து, அதிலிருந்த அணிகலன்களை அணிந்துகொண்டு வந்து தெருவில் உலவினான். அதைக் கண்ட அரசின் பணியாளர்கள், அந்த அணிகலன்கள் புதையல் பொருள்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்டு, அச்சிறுவனுடைய தந்தை வார்த்திகனைப் பிடித்து, சிறையிலடைத்தனர். அப்போது அவ்வார்த்திகன் மனைவி கார்த்திகையென்பாள் அழுது புலம்பினாள். அதை உணர்ந்து மதுரையின் கொற்றவை கோவில் கதவு மூடிக்கொண்டது. அதைக் கேள்விப்பட்ட பாண்டிய வேந்தன் தன் ஒற்றர் மூலம்