பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 241

.ண்மையறிந்து, வார்த்திகனை விடுவித்து, அவனிட (I/ம் . அவனுடைய மனைவியிடமும் மன்னிப்புக் கேட்டு, "இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்

உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென" த்தரவிட்டு ஆணை பிறப்பித்தான். இவ்வகைப்பட்ட குற்றங்களால் சிறைப்பட்டிருந்தோர் அனைவரையும் விடுதலை செய்து புதிய அரசியல் நெறியையும் விதிமுறையையும் நீதியையும் நிலை நாட்டியவன் பாண்டிய நெடுஞ்செழியனாவான் என்பதை இளங்கோவடிகள் சிறப்பாக எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

இவ்வாறு தென்தமிழ்நாட்டுப் பாண்டிய மன்னனின் ஆட்சி முறைச் சிறப்புகளை எடுத்துக்கூறிப் பண்டைய சாபத்தால் - பழவினையால் - கோவலன் கொலை நிகழ்ந்து விட்டதாகக் கூறிக் கண்ணகியை மதுராபதி சமாதானப் படுத்தினாள் என்பதைச் சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.

மதுரைக் காண்டத்தின் முடிவுக் கட்டுரையாகத் தென்தமிழ்நாட்டின் சிறப்பைக் குறித்து விரிவுபடக் காப்பிய

அடிகள் குறிப்பிடுகின்றன.

"முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்

படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளம்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்று.இவை யனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடவா ரியர்படை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்