பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 283

"ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்அமு தத்திருவாய்,

ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம் சீரைப் பயின்றுப்யும் சீலம்கொள் நாத முனியைநெஞ்சால் வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே” என்றும் இரு ஆழ்வார் பெருமான்களைப் பற்றியும் அவர்களுடைய தமிழைப்பற்றியும் சிறப்பித்துப் பாடுகிறார்.

மேலும் திருவரங்கத்தமுதனார், "சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழால்அளித்த

பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்சர ணாம்பதுமத் தாரியல் சென்னி இராமா னுசன்றன்னைச் சார்ந்தவர்தம் காரிய வண்மைஎன் னால்சொல்லொ னாதிக் கடலிடத்தே"

என்றும்,

"செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்

பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேரரத சீரரங்கத் தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா மெய்யன் இராமா னுசன்சர னேகதி வேறெனக்கே!” என்றும் சிறப்பாகப் பாடுகிறார்.

இப்பாடல்களில் தமிழின் சிறப்புப்பற்றி, செந்தமிழ் என்றும், மறைத்தமிழ் என்றும், தண்டமிழ் என்றும், இன்தமிழ் என்றும், ஈரத்தமிழ் என்றும், தமிழொரு மூன்றும் என்றும், வாட்டமிலா வண்டபமிழ் என்றும், பசுந்தமிழ் என்றும் பெருமைபடத் திருவரங்கத்தமுதனார் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

ஆழ்வார்கள் தங்கள் இனிய தமிழ் மூலம், இனிய தமிழ்ப் பாடல்கள் மூலம் தமிழகத்தின் மேன்மையையும் சிறப்பையும், நாகரிகப் பெருமைகளையும் வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்; தமிழின் வளத்தைப் பெருமைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வாழ்க ! ஆழ்வார்கள் வளர்த்த இசைத்தமிழ் என்றென்றும் வாழ்க !

• *