பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கொடிகள், கூவைக்கிழங்கின் பொடிகள், கவலைக் கொடிக் கிழங்குகள், தென்னையின் நெற்றுகள், இனிய மாங்கனிகள், பச்சிலை மாலைகள், பலாப்பழங்கள், வெள்ளுள்ளி, கரும்பு, கமுகுக் குலைகள், வாழைக் குலைகள், ஆளிக் குட்டிகள், சிங்கக் குட்டிகள், புலிக் குட்டிகள், யானைக் குட்டிகள், குரங்குக் குட்டிகள், கரடிக் குட்டிகள், வரையாடுகள், வருடை மான்கள், மான் குட்டிகள், கஸ்துTரிமான் குட்டிகள், கீரிப்பிள்ளைகள், ஆண் மயில்கள், புனுகுப்பூனைக் குட்டிகள், காட்டுக் கோழிகள், தேன் மொழி பேசும் கிளிகள் முதலிய பலவற்றையும் கொண்டுவந்து, தலையில் சுமந்துகொண்டு மன்னன் முன் நின்றனர் என்று காப்பியம் விவரிக்கிறது. " யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனத் திரளும், அணிஅரி தாரமும் ஏல வல்லியும், இருங்கறி வல்லியும் th கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும், தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும், காயமும் கரும்பும் பூமலி கொடியும், கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும் பெரும்குலை வாழையின் இருங்கனித் தாறும் ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாஅடி உளியமும், வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலிமஞ் ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்

மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு”

என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

இதே போல, ஆழ்வார்கள் இயற்கை வளங்களைப் பற்றியும் இயற்கையோடு இணைந்த உயிரினங்களின்

வாழ்நிலைபற்றியும் மிகவும் அழகுற விவரித்துப் பாடியுள்ளார்கள்.