பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளியங் குடி”யென்றும், "கடியுடை கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெல் அசைய, வடிவுடையன்னம், பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யென்றும் குறிப்பிடுகிறார்.

திருப்புள்ளம் பூதங்குடியைப்பற்றி, "நறிய மலர்மேல் சுரும்பார்க்க, எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறைவண் டிசைபாடும், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும், காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி யெழிலாரும், மன்னு முதுநீர் அரவிந்த, மலர்மேல் வரிவண் டிசைபாட, புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், புடையார் கழனி யெழிலாரும், புள்ளம் பூதங் குடிதானே” என்று கற்றார் பரவும் மங்கையர்கோன் பாடுகிறார்.

திருக்கூடலூர்ப் பெருமானைப் பாடும்போது, அந்த வளம்மிக்க திவ்ய தேசத்தைப்பற்றி "நறுந்தண் தீந்தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும், கள்ள நாரை வயலுள், கயல்மீன் கொள்ளை கொள்ளும், வண்டல் அலையுள் கெண்டை மிளிர, கொண்டல் அதிரும் எக்கலிடு நுண்மணல் மேல் எங்கும் கொக்கின் பழம்வீழ், இலைதாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூடலூரே” என்றெல்லாம் கோவைத் தமிழால் கலியன் சொல்லும் பாவைப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

திருநறையூரைப்பற்றி, "வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு, மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும், செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில், உழும் செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி, உலகெலாம் சந்தனமும் அகிலும் கொள்ள, செழும்பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த, பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னி நாடன், தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த, மலைத் தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய,