பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சோலைகள் சூழ்திருவல்லவாழ், பச்சிலை நீள் கமுகும் பலவும், தெங்கும் வாழைகளும், மச்சனி மாடங்கள் மீதனவும் தண் திருவல்லவாழ், பண்குரல் வண்டினொடு பசுந்தென்றலும் ஆகியெங்கும் சேண்சினையோங்கு மரச்செழுங்கானல் திருவல்லவாழ், ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலும் ஆகியெங்கும் மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண் திருவல்லவாழ், குழல் என்ன யாழுமென்னக் குளிர் சோலையுள் தேனருந்தி மழலைவரி வண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்” என்றெல்லாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி குறிப்பிடுகிறது.

துர்து செல்லும் பறவையினங்களைக் குறிப்பிட்டுக் குருகினங்கள், கருநாராய், மடவன்னங்கள், புன்னை மேலுறை பூங்குயில்கள், கிளிகள், வண்டினங்கள் முதலிய உயிரினங்களைக் குறிப்பிட்டு அவைகளைத் தங்கள் பக்திப் பரவசத்தோடும் பக்தி உள்ளத்தோடும் ஆழ்வார்கள் பாடுகிறார்கள்.

செழுநீர் வயல் குட்ட நாட்டுத் திருப்புலியூரைப்பற்றி, புன்னையம் பொழில்சூழ் திருப்புலியூர் என்றும், ஊர்வளம் கிளர் சோலையும் கரும்பும் பெருஞ்செந்நெலும் சூழ்ந்து ஏர்வளம் கிளர்தண் பனைக்குட்ட நாட்டுத் திருப்புலியூர் என்றும், சுனையினுள் தடந்தாமரை மலரும் தண்திருப்புலியூர் எனவும், மெல்லிலைச் செல்வ வண்கொடிப் புல்க வீங்கிளந்தாள் கமுகின் மல்லிலை மடல் வாழையின் கனிசூழ்ந்து மணம் கமழ்ந்து புல்லிலைத் தெங்கின் ஊடுகால் உலவும் தண்திருப்புலியூர் என்றும், நம்மாழ்வார் மிகவும் சிறப்பாக அழகுபடப் பாடுகிறார்.

ஆழ்வார்கள் காலத்தில் பாரத தேசம் சிறப்பான உயர்ந்த நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்தது. சாகுபடித் தொழில் சிறந்து வளர்ச்சி பெற்றிருந்தது. ஏரிகுளங்கள் எண்னற்ற நீர் நிலைகள் நிர்மானிக்கப்பட்டு நிலவளம் மேலும் வளமாக்கப்பட்டிருந்தது. "ஏர் வளம் கிளர்" என்று நம்மாழ்வார் குறிப்பிடுகிறார். ஏர்வளம் சிறந்து விளங்கியது. н நெல், கரும்பு, வாழை, கமுகு, தென்னை, மா, பலா முதலிய எண்ணற்ற விளைபயிர்கள் ஏர்வளத்தால் சிறந்து