பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 49

"வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும்" _வறு காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

மரக்கலங்கள் மூலமாகக் கொண்டுசெல்லவும், கொண்டுவரவுமான செல்வத்திற்காகத் தங்கள் நாட்டை விட்டு வந்துள்ள வெளிநாட்டார் பலரும் ஒன்றுகலந்து வாழும் கடற்கரையோரக் குடியிருப்புகளைக் கொண்டிருந்த விதிகள் இருந்தன.

" கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்" வ வறு காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

பல வேறு வண்ணங்களினாலான குழம்புகளும் கண்ணப் பொடிகளும், குளிர்ந்த மனம்மிக்க சந்தனமும் பலர் களும் அகில் முதலான வாசனைப் புகைப் பொருள்களும் விற்கப்படும் வீதிகள் இருந்தன.

" வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வளர் திரிதரு வீதியும்" இருந்தனவென்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

பட்டு நூலினாலும் ரோமங்களாலும் பருத்தி மா வினாலும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் குடியிருப்புகளைக் கொண்ட வீதிகள் இருந்தன என்பதை,

" பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்" என்றும், பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும் மாசில்லாத முத்துகளும், மணிகளும், இரத்தினங்களும், பொன்னும் குவிந்து கிடக்கும் செல்வம் நிறைந்த வீதிகள் இருந்தன க. கண் தை,

" தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை யறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்