பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 85 ஒருவராவர். அவர் தம்முடைய காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் இருந்த அரசர்களும் அவர்கள் குடிகளும் வாழ்ந்த சடநாகரிக முறைகளே நாம் கண்ணுல் கண்டு அருவருக்கவும் அருவருத்து வெறுக்கவும் வேண்டும் என்பதற்காகவே அவற்றை இத்துனே விரிவாகவும் பச்சை பச்சையாகவும் வருணிக்கின்ருர். அவர் சிலப்பதிகார காவி. யத்தை இயற்றியதன் தலையாய நோக்கம் அதுவேதான் என்று கூறினுல் மிகையாகாது. -- மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் பாலஸ்தீன நாட்டில் ஸோடம், கொமரா என்ற பெயருடைய இரண்டு நகரங்கள் இருந்தன. அங்கு வாழ்ந்த மக்களும் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரையிலும் வாழ்ந்த மக்களைப்போலவே ஆண். டவன் கற்பித்த கட்டளைகளுக்கு விரோதமாகச் செல்வத்தில் திளைத்தார்கள். ஆடம்பரத்தில் மூழ்கினர்கள், காமத்தில் ஆழ்ந்தார்கள். அதைக்கண்டு ஆண்டவன் சினந்தான், அந்த நகரங்கள் இரண்டையும் அழித்தான் என்று கிறிஸ்தவ வேதநூல் கூறுகின்றது. அதுபோலவே எவர் அறநெறிக்கு ஒவ்வாத ஆடம்பரத். திலும் காமத்திலும் ஈடுபடுகிருர்களோ, அவர்கள் அனேவரும் அழிந்தே போவார்கள். இதுவே நாம் சிலப்பதிகார காவியத்திலிருந்து கசடறக்கற்று நிற்கவேண்டிய தகரிப் பெரும் படிப்பினே என்று பன்முறை வற்புறுத்த விரும்பு. கின்றேன். இந்தப் படிப்பினே தமிழ் மக்கள் இதயத்தில் இறவாத எச்சரிக்கையாக நின்று அவர்களை அழியாமல் காக்குமாக !