பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 91 -- = - - போர்க்காலத்தில் எப்போதும்விட அ தி க க் கண்டிப்பாக நடைபெறும். அந்தக் காரணத்தினுல்தான் கபிலபுரம் சிங்கபுரம் இரண்டுக்குமிடையில் எவ்வித மக்கள் நடமாட்டமும் இல்லாமல் இருந்தது எல்லோரும் ஓர் ஊரிலிருந்து மற்ற ஊருக்குப் போவதற்குத் துணிவரேல், அவர் போர் வீரராகவோ அல்லது அவர்க்கு உளவு அறிந்து உரைக்கும் ஒற்றராகவோதான் இருப்பார். அதனுல் சங்கமன் கபிலப்ரித்தில் பிறந்து சிங்கபுரத்தான் போல் வேடம்பூண்டு காணப்பட்டதால் அவனைப் பரதன் ஒற்றன் என்று எண்ணியதில் தவறில்லை. கரந்துறைமாக்கள் ஒற்றர் முதலாயினர் . நாட்டார் அவர்கள் கூறுவதும் காண்க. அதனுடன் பரதன் நகரத்தின் பாதுகாவலுக்கு அரசனுல் பொறுப்பாக்கப் பெற்றவன். ஆதலால் அவன் சங்கமனே ஒற்றன் என்று முடிவு செய்ததும், அதற்கேற்பக் கொல்வித்ததும் தவருகா. ஒற்றர்கள் பிடிபட்டால், அதிலும் போர்க்காலத்தில் பிடிபட்டால் கொலை தண்டனை பெறுவர் என்பது யாவரும் அறிந்ததே. என்று வேங்கடசாமி சென்ற பிறப்பில் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதி ஒருவனே அநியாயமாகக் கொலை செய்தால், அவ்வாறு கொலை செய்பவனே அடுத்த பிறப்பில் கொலையுண்ணத் தகுந்தவன் ஆவான். அவ்வாறின்றி நியாயமான காரணத்துக்காக நீதி முறைப்படி குற்றங்கள் செய்தவனேக் கொலே செய்ய நேர்ந்தால், அதற்காகக் கொலை செய்தவனே அடுத்த பிறப்பில் கொல்லச்செய்வது என்பது அறமாகாது. பரதனுகிய கோவலன் தவறு செய்யவில்லை. சங்கமகிைய பொற்கொல்லனே தவறு செய்தான். பரதன் தன் கடமையையே செய்தான். அதனுல் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படவேண்டியவன் சங்கமனேயன்றிப் பரதன் அல்லன். அதல்ை கோவலன் கொலேயுண்டதற்கு இளங்கோவடிகள் கூறும் ஊழ்வினைக் காரணம் கொஞ்சமும் பொருந்துவதாயில்"ல,