பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 93 கோவலனே விசாரியாது கொல்லுமாறு ஆணே தந்தான் என்று இளங்கோவடிகள் கூறுகின் ருர் (சிலப். 16:148154). ஆல்ை கோவலன் கொலேயுண்டதற்கு முந்திய பிறப்பில் செய்த தீவினையே காரணம் என்று கூருமல், அரசனும் கோவலனும் இந்தப் பிறப்பில் செய்த தீச்செயலே காரணம் என்று கூற முடியாதா என்று ஆராய விரும்புகின்றேன். கோவலன் மரணத்துக்குக் காரணம் அரசனுடைய ஊழ்வினேயுமன்று, கோவலனுடைய ஊழ்வினையுமன்று, இரு. வரும் காமத்தில் ஆழ்ந்திருந்ததேயாகும். கோவலன் கண்ணகியைக் கைவிடேன் என்று அங்கி சான் ருகக் கூறி வாழ்ந்துவந்தவன் அதை மறந்து காம. வயத்தய்ை நகரநம்பியர் (பரத்தர்) திரிதரு மறுகில் சென்று மாதவியின் மாலேயை வாங்கி அவள் விடே தஞ்சமென்று தங்கி முன்னேர் தேடிவைத்த செல்வத்தையும் கண்ணகி அணிந்திருந்த அருங்கலன்களையும் அந்தக் காமதேவதை. யின் காலடியில் வைத்து வழிபாடு செய்யாதிருந்திருந்தால், அவன் மதுரைக்குச் சென்று மரணம் அடைந்திருக்கமாட். Լ- T 5ԾT , இந்திரவிழாவன்று மாலேயில் கோவலனும் மாதவியும் கடற்கரையில் சிலதியர் அமைத்த கட்டிலில் அமர்ந்தனர். கோவலன் அகப்பொருட்சுவையுடைய பல வரிப் பாட்டுக் களைப் பாடிக்கொண்டு வீ8ண வாசித்தான். அதனுல் மாதவி இவன் வேறு மகளிரிடம் விருப்பமுடையன் என்று எண்ணி. ஞள். அவள் கையிலிருந்த வீணேயை வாங்கித் தானும் வேறு மைந்தரிடம் விருப்புடையாள்போல அகப்பொருட் பாடல்களைப் பாடிக்கொண்டு வீணே வாசித்தாள். கோவலன் இதைக் கேட்டதும் அவளிடம் வெறுப்புக்கொண்டு அவளே விட்டு நீங்கின்ை. இவ்வாறு அவன் நீங்கியதற்குக் காரணம் ஊழ்வி&ன வந்து உருத்ததே என்று இளங்கோவடிகள் கூறுகின்ருர்.