பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிலப்பதிகாரம் கோவலன் மதுரை நகர்க்குள் நுழைந்தவுடனேயே மகிழ்தரு வீதியில் காலெடுத்து வைத்துவிட்டான். அவ்வளவுதான், அந்த நிமிஷம்முதல் வந்த காரியத்தை அறவே மறந்துவிட்டான். அந்த வீதி தரும் காட்சிகளுக்கே இதயத்தைக் கொடுத்தான். மகிழ்ச்சிதரும் மங்கையர் வீதி மனத். தில் இடம்பெற்றபின் வந்த காரியத்துக்கு அதில் இடமேது ? அவன் முற்றிலும் காமயிச்சையினின்று விடுதலை பெற் றிருந்தால் தன்னுடைய இனத்தவரைக் கண்டு பேசி வீடும் கடையும் அமர்த்தியிருப்பான். அவ்வாறு செய்திருந்தால் அவன் மறுநாள் கண்ணகியின் சிலம்பைத் தெருவில்வைத்து விலேபேச நேர்ந்திராது, அதன் காரணமாகக் கொலையுண்டதற்குக் காரணம் அவனுடைய காமமேயன்றி ஊழ்வினையன்று. ■ கோவலன் கொலேயுண்டதற்கு அவனுடைய காம - மட்டுமன்று, அரசனுடைய காமமும் காரணமாகும். அரச. னுடைய அவையிலேயுள்ள அரங்கத்தில் நாடக மகளிர் ஆடினர்; பாடினர். அப்போது அரசனுடன் வீற்றிருந்த கோப்பெருந்தேவி அரசனுக்கு ஆடிப் பாடின. பெண்களுள் ஒருத்திமீது உள்ளம் சென்றது என்று எண்ணி வருந்தினுள். அரசி அரசனுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வருபவளாதலால் அரசன் உள்ளம் காமவயத்ததாக ஆகாதபோது ஆனதாக எண்ணமாட்டாள். இவ்வாறு அவன் காமத்திடம் எளியய்ை இருந்ததைப் பலதடவை அறிபவளாதலால்தான் இப்போது அரசன் உள்ளம் தவருகச் செல்கின்றது என்று உணர்ந்தாள். உணர்ந்தவள் நோவு என்று கூறிக்கொண்டு அந்தப்புரம் சென்ருள். அரசன் காமபரவசனுய் அமைச்சர் முதலாயினுேரை விட்டுவிட்டு அ ந் த ப் பு ர ம் நாடிச் சென்ருன். இந்தச் சமயத்தில் பொற்கொல்லன் வந்து இராணியின் சிலம்பைத் திருடிய கள்வனைப் பிடித்துவிட்டதாகக் கூறி. ன்ை. அதைக் கேட்டதும்