பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை In 7 ஆளுல் மகிழ்தரு வீதிக்கோ அதற்குமட்டும் 70 வரிகள் பயன்படுகின்றன. அதிலிருந்து கோவலன் அந்தக் காமுகரி வீதியிலேயே அதிக நேரத்தைக் கழித்தான் என்பது தெரிய வரும். இளங்கோவடிகள் மகிழ்தரும் வீதி என்று கடையாய பரத்தையர் வீதியைக் கூறுவதுபோலவே, மாங்குடி மருதனர் மணங்கமழ்சேரி என்று கூறுகின்ருர் (மதுரைக் காஞ்சி 329). அக்காலத்து மண்தேய்த்த புகழுடைய மைந்தர்க்கு அந்த வீதிகளும் சேரிகளுமே மணம் கமழ்ந்தன. மகிழ்ச்சி தந்தன. கோவலன் மாதவியை விட்டு' வந்துவிட்டபோதிலும் இன்னும் அவள் மயக்கத்தினின்று விடுதலை பெறவில்லை. அதனுல்தானே கவுந்தியடிகளுடன் காட்டு வழியாக வரும்போது மாதவி அனுப்பிய கடிதத்தைக் கையில் வாங்கியதும் கோவலனுக்கு உடனுறை காலத்து உரைத்த கெய்வாசம் குறிகுெறிக் கூந்தன் மண்பொறி உணர்த்தியதும் அவன் அதைப் பிரித்துப் பாராது மயங்கி நின்ருன். அந்தணன் கொண்டுவந்த ஒலையின்மீது மாதவி தன் கூந்தலால் இலச்சினை யிட்டிருந்தாள். அது கோவலனுக்கு அவளுடன் கூடிய காலத்து அவள் பூசியிருந்த புழுகுநெய்யின் மணத்தை நினைப்பூட்டியது. புழுகுநெய் காமத்தைக் கிளறும் என்று பண்டைக்காலத்துக் காமநூலாரும் இக்காலத்துக் காமநூலாரும் கூறுவர். இவ்வாறு இன்னும் காமவெறி நீங்காதவகை இருந்தபடியினுல்தான் கோவலன் பரத்தையர் வீதிகளில் பாதி நேரத்துக்கு அதிகமாகக் கழித்தான். அந்த மயக்கத்தில் பொன்வணிகர் வீதி சென்றபோதுகூட, தான் வந்த நோக்கம் அவனுடைய ஞாபகத்துக்கு வராது இருந்துவிட்டது.