பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|| 4. சிலப்பதிகாரம் அப்படியானுல் ஒருவன் இப்பிறப்பிற் செய்த ஒவ்வொரு செயலுக்கும் காரஒனம் முற்பிறப்பிற் செய்த ஊழ்வினையே காரணம் என்று கூறவேண்டியதாக ஆகும். அப்போது அவன் செய்யும் செயல் நற்செயலோ தீச்செயலோ அதற்கு அவன் பொறுப்பாளி ஆகான். அவன் ஊழ்வினை கையில் வைத்து ஆட்டும் பொம்மையே ஆவான். எவன் தான் செய்யும் செயலுக்குப் பொறுப்பாளி அல்லனுே அவனே அந்தச் செயல் நல்லதா யிருந்தால் பாராட்டவும் தீயதாயிருந்தால் கண்டிக்கவும் முடியாது. அத்துடன் அவன் ஊழ்வினே காட்டும்வழியிலேயே நடக்க வேண்டியவனுயிருப்பதால் அவன் ஊழ்வினையை ஒழிப்பதற்காக எதுவும் செய்ய முடியாது. அவன் ஊழ்வினையின் பிடிப்பிலிருந்து எந்த நாளும் விடுதலை பெற முடியாது. அன்பர்களே ! இதுகாறும் ஆராய்ந்ததன் பயனுக நாம் காணும் முடிவு யாதெனில் 1. முதலாவதாக இளங்கோவடிகள் ஊழ்வினையை நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை என்பதும் 2. இரண்டாவதாக ஊழ்வினையைக் காட்டி உண். டாக்கும் ஒழுக்கம் உண்மையான ஒழுக்கமாகாது என்பதும், 3. மூன் ருவதாக, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்று கூறுவதினும், உருத்துவரும் ஊழையும் ஒழுக்கமுடையார் உப்பக்கம் கண்டு விடுவர் என்று கூறுவதே சாலப் பொருந்தும் என்பது மாகும். =