பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள் முன்னுரை (பொ. திருகூடசுந்தரம்)

  • ===

தலைவர் அவர்களே ! சகோதரர்களே ! சகோதரிகளே ! உங்கள் எல்லோர்க்கும் என் தாழ்மையான வணக்கம். பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை அவர்கள் தம்முடைய அன்னயார் சொர்ணம்மாள் அவர்கள் பெயரால் அமைத்துள்ள சொற்பொழிவுகளை இந்த ஆண்டில் நிகழ்த்துமாறு என்னை இப் பல்கலைக்கழகத்தார் அன்புடன் அழைத்ததற்காக என் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். செந்தமிழ்ச் செல்வரான சேதுப் பிள்ளை அவர்கள், திரு. ஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் ' திக்கெலாம் புகழும் திருநெல்வேலி ’’ என்று பாராட்டிய தென் பாண்டிச் சீமை. யில் பிறந்த பெரியார். பேராசிரியர், பெருநாவலர், இலக். கியச் செல்வர் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தாரால் பட்டம் அளிக்கப் ப்ெற்றவர். பொன் திணிக்த புனல் பெருகும் பொருநை எனும் திருகதி ' என்று கம்பர் பெருமானல் சிறப்பிக்கப்பெற்ற தாம்பிரவருணி ஆற்றங்கரையில் நாங்கள் இருவரும் பிறந்தவர்கள், ஒரே கல்லூரியில் கல்வி பயிலாவிடினும் ஒரே காலத்தில் படித்தவர்கள். நாங்கள் இருவரும் சட்டம் பயின்றபோதிலும் அதில் நாட்டம் கொள்ளாதவர்கள். அவர்கள் தாய்மொழியின் பணியில் ஈடுபட்டார்கள், அடியேன் தாய்நாட்டின் பணியில் ஈடுபட்டேன். நாங்கள் இருவரும்