பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி கற்பு 15 பெண் மனங்கலங்கா திருக்க வேண்டிய மற்ருெரு ாந்தர்ப்பத்தை, சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை என்னும் குறள் குறிப்பிடுகின்றது. மனைவியானவள் தன் கணவனேத் தவிர வேறு எந்த ஆண்மகனிடமும் காதல் .ெ லுத்தலாகாது. காதல் எழுமேல் தன் மனத்தைக் கலங்க விடாமல் நிறுத்துதல் கடன். ஆகவே மனைவி மனங்கலங்கா திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இரண்டு. ஒன்றில் கணவன் தீங்கு செய்தா. லும் தெய்வமே என்று மனத்தில் உறுதி செய்துகொள்ள"வண்டும், மற்ருென்றில் பிற ஆடவரைக் கண்டு மயங்: மனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். க ண விசன்று தெய்வமாகக் கொள்ளுதல், பிற ஆடவரை இச்சியாட்டாள், என்னும் இரண்டுமே கற்பின் தனிச் சிறப்புக்கள். 158 இந்த இரண்டாவது இயல்பைத் தொல்க'; திருவள்ளுவர்போல் த னி யா க ப் பிரித்து விளக்கவில்ஜல் அல்ை அது முதல் இயல்பிலேயே அடங்கியதேயாகும். அடிமையின் உடல் பொருள் ஆவி எல்லாம் ஆண்டானுக்கே சொந்தம். அதல்ை மனைவி தன் உடலைப் பிறர்க்குத் தர இச் சித்தலுமாகாது, இசைதலுமாகாது என்பது பெறப்படும். ஆகவே தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கற்பு என்பதற்கு ஆண்டான் அடிமைத் திறம் என்று ஒரேவித. மாக இலக்கணம் கூறுகின்றனர் என்பது தெளிவாகும். இவ்வாறு திருவள்ளுவர் கணவனை மனைவியின் தெய்வ மாக ஆக்கிய காரணத்தால்தான், மனேவி இத் தகையவளாக இருக்கவேண்டும் என்பதற்குப் பத்துக் குறள்கள் செய்தவர் கணவன் இத்தகையவகை இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு குறள்கூடச் செய்தாரில்லை. கணவன் எத். கையவனுயிருந்தாலும் மனைவி இத்தகையவளாக இருக்க வண்டும் என்று வற்புறுத்துவதே அவருடைய நோக்கம்.