பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிலப்பதிகாரம் _ விட்டவகை வாழ்ந்துவந்தபடியால் தன்னுடைய காதற். பரத்தைக்குப் பிறந்த பெண்ணுக்குத் தன்னுடைய குலதெய்வத்தின் பெயரையிட்டுப் பெருநிதிச் செலவுசெய்து விழா நடத்தினன். கோவலன் இவ்வாறு நடந்துவந்ததால் கண்ணகிக்கு உண்டான துக்கத்துக்கு அளவில்லை. கணவன் பரத்தைமை கொள்வதால் உண்டாகும் கொடுமையினும் பெருந்தீங்கு ம&ன விக்கு உண்டாவதில்லை. ஆயினும் கண்ணகி அதைப் பொறுத்தலே கற்பின் இலக்கணம் என்று அறிந்தவளாதலின், அணிகளைமட்டும் அணியவில்லேயே றன்றி, வேறு எவ்விதத்திலும் தன் மனத்திலுள்ள வேதனையை வெளிக்காட்டிளிைல்லை. கோவலன் மாதவியிடம் மயங்கி அவளே விட்டுப் பிரிய மனமில்லாதவனுய் வீட்டையும் மனைவியையும் மறந்தநாள் முதல் கண்ணகி, அஞ்செஞ் சீறடி அணி.சிலம் பொழிய, மென்துகில் அல்குல் மேகலே நீங்கக், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள், மங்கல வணியிற் பிறிதணி மகிழாள், கொடுங்குழை துறந்து வடிந்துவிம் காதினள், திங்கள் வாண்முகம் சிறுவியர்ப் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப், பவள வாணுதல் திலகம் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்தளாய் . உடம்பில் உயிரை வைத்துக்கொண்டிருந்தாள். காரைக்காலம்மையாரை அ வ ரு ைட ய கணவன் தெய்வம் என்று கூறி வணங்கியபோது அவர், ஈங்கிவன் குறித்த கொள்கையிது, இனி இவனுக்காகத் தாங்கிய வனப்பு கின்ற தசைப் பொதி கழித்தார் . அதுபோல் கண்ணகியும் கணவன் கண்டு மகிழ்வதற்காக