பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 45 நெசவுத் தொழிலாளர் தவிர வேறு பலவிதமான தொழிலாளர்களும் இருந்தனர். கன்னர், கொல்லர், தச்சர், தட்டார், தையற்காரர் இருந்ததோடு அழகான சித்திரம் எழுதும் ஒவியர்களும் சிற்பங்கள் இயற்றும் மண்ணிட்டாளர் களும் துணியாலும் கிடைச்சாலும் புட்பம். வாடாமாலை, பொய்க்கொண்டை முதலியன செய்வோரும் இருந்தனர். H இவை தவிர காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டும், பவள. மும், சந்தனமும், அகிலும், முத்தும், மணிகளும், பொன்னும் நிறைந்த கடைகள் பலவிருந்தன. பொன் வாணிகர் கடைகளில் பொன்னுலும் மணியாலும் முத்தாலும் செய்த அணிகலன்கள் எண்ணிக் கரைகாண வரியனவாக இருந்தன. மதுரைமாநகரத்தில் இந்திரசாலம்போன்ற வைரம், பசிய கதிரொளி பரந்த மரகதம், நால்வகை மாணிக்கம், பொன்னை மாசறத் தெளியவைத்தா லொத்த புட்பராகம், தேன் துளிபோன்ற வைடுரியம், இருளேத் தெளியவைத்தா லனைய நீலம், மஞ்சளும் சிவப்பும் கலந்த கோமேதகம், தெளிந்த ஒளியையுடைய முத்து, தூதுளங்கனி போன்ற பவளம் ஆகிய நவமணிகளின் பிறப்பு முதல் சிறப்பு ஈருகத் தெரியவல்ல வணிகர்களுடைய இரத்தினங்கள் உண்டு. சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்புநதம் என்னும் நால்வகைத் தங்க வகைகளே நன்கு அறியக்கூடிய பொன். வாணிகரும் இருந்தனர். இவ்வாறு மதுரை மாநகரில் பலவிதமான செல்வப். பொருள்கள் நிறைந்திருந்த கடைத்தெருவை இளங்கோ. வடிகள் வகைதெரி வறியா வளந்தலே மயங்கிய அரசு விழை திருவின் அங்காடி வீதி அதாவது அரசர்களும் காண்பதற்கு விரும்பத் தக்கவாறு பொருள் நிறைந்திருந்த கடைத்தெரு என்று வருணிக். கின்ருர்.