பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிலப்பதிகாரம் - அக்காலத்து மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளி. லும் சிறப்பான வாணிகம் நடத்திவந்தனர். காவிரிப்பூம். பட்டினத்தில் வாணிகக் கப்பல் ஏராளமாக வந்து தங்குவ. தற்காகத் துறைமுகமிருந்தது. அதை இளங்கோவடிகள் மலேப்பல் தாரமும் கடற்பல் தாரமும் வளக்தலே மயங்கிய துளங்குகல விருக்கை அதாவது பலவிதமான பண்டங்கள் நிறைந்த மரக்கலங்கள் அசைகின்ற துறைமுகம் என்பர். கப்பல்கள் இரவில் கரை வந்து சேர்வதற்குத் துணையாகத் துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று இருந்தது. அக்காலத்தில் வாணிகத்தில் சிறந்த யவன நாட்டவர்கள் வாணிகத்தின் பொருட்டு காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரையில் மாளிகை அமைத்து வாழ்ந்து வந்தனர். காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தரை மார்க்கமாகவும் நீர்மார்க்கமாகவும் வந்து குவிந்த பண்டங்கள் பலப்பல. நீரின் வந்த கிமிர் பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி முடையும் வடமலேப் பிறந்த மணியும் பொன்னும் குடமலேப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடன் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காமுகத் தாக்கமும் (பட்டின. 185-191) வந்தன என்று பட்டினப்பாலே கூறுகின்றது. இவ்வாறு செல்வத்துறைகளில் எல்லாம் சிறந்திருந்த படியால் காவிரிப்பூம்பட்டினமானது அரும்பொருள் தருஉம் விருந்தில் தேஎம் ஒருங்குதொக் கன்ன எழிலுடையதாக இருந்தது. அதன் காரணமாக அது முழங்குகடன் ஞால முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளத்த தாகி