பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிலப்பதிகாரம் அதாவது மணிகள் கோத்த மாலைகளால் அலங்கா ரஞ் செய்யப்பட்டனவாக இருக்கும். பெரிய மாளிகைகளின் கூரைகள் மண் ஒட்டால் வேயாமல் பொன்தகட்டால் வேய்ந்திருக்கும். அல்லது வேயாமாடங்களாக இருக்கும். அதில் காதலர் நிலவுப் பயன் கொள்வர். இரவில் மாணிக்க விளக்கு ஏற்றுவர் (கன : 3). மயன் செய்து வைத்தாற்போன்ற மணிக்கால் அமளியில் உறங்குவர் (மனே : 12). அமளியைச் சுற்றி ஒவிய எழினி சூழக் கட்டுவர், ஒவிய எழினி என்பது சித்திரப்பணி எழுதின மசகவரி என்னும் கொசுவலை. கட்டிலின்மீது சித்திர விதானத்தைக் கட்டுவர் (கடலாடு : 169-170). அக்காலத்து மங்கையர் நாடோறும் பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறின கன்னிர் உரைத்த நெய்வாசம் காறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலர்த்தி பூமென் கூந்தலே வகைதொறும் மான் மதக் கொழுஞ்சே றுட்டுவர் (கடலாடு : 76-81) அதாவது பத்துத்துவர், ஐந்து விரை, முப்பத்திரண்டு ஓமாலிகை இவற்றில் ஊறிய நீரால் ஸ்நானம் செய்வர். கூந்தலை அகிற்புகையால் உலர்த்திவிட்டுக் கஸ்துாரிக் குழம்பைத் தடவி ஐந்து விதமாக முடிப்பர். அதன்பின் அழகிய பூந்துகில் உடுத்துவர். மாதவி கோவலனுடைய ஊடலைத் தீர்ப்பற்காகக் கோலஞ் செய்தபோது முப்பத்திரண்டு வகை நகைகளை அணிந்ததாக இளங்கோவடிகள் கூறுகின்ருர். அவள் தன். னுடைய காலிலுள்ள மெல்லிய விரல்களில் மோதிரம், பீலி முதலியவற்றை அணிந்தாள். கால்களில் பாதசாலமும் பாடகமும் சதங்கையும் அணிந்தபின் அரையில் நீலநிறம்