பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 49 - அமைந்த அழகிய பூந்துகிலே உடுத்தாள். அதன் மீது முப்பத்திரண்டு முத்துக்கோவையுடைய .ே ம க லே ைய அணிந்தாள். தோளில் கண்டிகையும் முத்துமாலேயும், கைகளில் மாணிக்கச்சூடகமும், பொன், மணி, சங்கு, பவளம் இவற்ருல் செய்த வளையல்களும், கைவிரல்களில் நெளிவு மோதிரம்போன்றவற்றையும் அணிந்தாள். அவளுடைய கழுத்தைச் சங்கிலி, சவடி, சரப்பணி, முத்தாரம் முதலியன அழகு செய்தன. இந்திர நீலமும் வயிரமும் பதித்த குதம்பைகள் காலுக்கு ஒளி தந்தன. பூரப்பா8ள முதலிய தலையணிகளைக் கூந்தலில் அணிந்தாள். அக்காலத்து மக்கள் பலவகையான வாசனைப்பொருள் களே ப் பயன்படுத்தினர், வண்ணம், சுண்ணம், தண்ணறும் சாந்தம், பூ முதலியன அவற்றுள் சில. செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அக்திக் தேறல் மாந்துவர் அவர்களுடைய வெற்றிலைப்பெட்டியும் பொன்னுல் செய்ததாகும். பெண்கள் வையம், சிவிகை, மணிக்காலமளி ஆகிய வாகனங்களில் ஏறிச்செல்வர். ஆண்கள் குதிரைகளில் ஏறுவர். (கடலாடு 1 19-120). இவ்வாறு காவிரிப்பூம்பட்டினமும் மதுரை மாநகரமும் செல்வச் செழிப்பும் சுகபோக வாழ்க்கையும் உடையனவாக இருந்தன. அங்கிருந்த மக்கள் மண்ணகம் மருள, விண். ணகம் வியப்ப (இந்திர 157) வாழ்ந்தனர். மண்ணிலுள்ள வர்கள் இப்படித்தான் தேவர்கள் வாழ்வர்போலும் என்று மருண்டனர். விண்ணிலுள்ளவர்கள் நம்முடைய தேவ. லோகத்தினும் இந்நகரங்கள் சிறப்புடையனவோ என்று வியந்தனர். இவ்வாறு சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரைமா நகரத்திலும் வாழ்ந்த மக்கள் ஏராள மாகச் செல்வம் படைத்திருந்தார்கள், இன்பமாக வாழ்க்கை நடத்தினர்கள், இவ்வளவும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு