பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிலப்பதிகாரம். முன்னர் என்னும்போது இக்காலத்து அறிஞர்களுடைய மனத்தில் இறும்பூது உண்டாவது இயற்கையே. ஆதலால் ஒரு பேரறிஞர் 1. செல்வம் மலிந்த நாடே சிறப்புடைய நாடு என்றும், 2. அக்காலத்தியத் தமிழ்மக்கள் நாகரிக முறைகள் என்று கருதப்படுகின்ற பல i. துறைகளிலும் தலைசிறந்து விளங்கினர்கள் என்றும் அள. வற்ற ஆனந்தத்துடன் கூறுகின் ருர் செல்வத்தை வைத்துச் சிறப்பை நிருணயித்தல் தவறு என்பதே எக்காலத்திற்கும் ஒத்த ஓர் உண்மையாகும். செல்வம் என்பது மனிதன் வாழ்வதற்கு இன்றியமை. யாது வேண்டப்படுவதே. பொருள் இல்லார்க்கு இவ்வுலக. மில்லை என்பது தமிழ்மறை. செல்வம் இல்லாதவன் தரித்திரனே, ஆல்ை செல்வம் மட்டும் உள்ளவன் அவனி லும் தரித்திரனுவான் என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று கூறும். செல்வம் இருந்தால்மட்டும் ஒருவன் செல்வன் ஆகிவிடமாட்டான். செல்வத்துடன் வேருென்றும் இருக்கவேண்டும், அப்பொழுதே அவன் செல்வன் ஆவான். அவ்வாறு செல்வத்துடன் இருக்கவேண்டிய பொருள் யாது? " மனிதன் உணவினல் மட்டும் அதாவது செல்வத்தால் மட்டும் வாழ்வதில்லை என்று இயேசு கிறிஸ்து என்னும் உலகப் பெரியார்களில் ஒருவர் கூறினர். செல்வம் ஒருவ, னுக்கு உயிர் கொடுக்கும், ஆல்ை வாழ்வு கொடுக்காது. ஒருவன் உயிருடன் இருப்பதோடு வாழவும் செய்யவேண்டு. மாயின் வேருென்றும் அவனிடம் இருக்கவேண்டும். அது யாது ? உலகத்திலுள்ள உயிர்ப்பிராணிகளிடம் உள்ள இயற்கை. உணர்ச்சிகள் அனைத்திலும் தலையாயது, தலையாய ஆற்றலுடையது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உணர்ச்சியாகும். அந்த உணர்ச்சி மனிதனிடமும் அத்தகைய ஆற்றலுடனே உள்ளது. அழுகு தொழுநோயர்கூட ஆவியைவிட்டு விடுதலைபெற விழைவதில்லை.