பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 77 - - = உடல் அழகைமட்டுமே அனுபவித்தான். அதுதான் தேவி யின் மனவேதனைக்குக் காரணம். ஆடல் ப ா ட ல் நிகழும்போது அவற்றைவிட்டு அவற்றை நிகழ்த்தும் பெண்ணின் உடலைக்கண்டு மயங்கியவன் நெடுஞ்செழியன் மட்டும்தான் என்பதில்லே. கரிகாற் சோழன் முன்னிலையில் மாதவி அரங்கேறி ஆடினுள், பாடினுள், அப்போது அவனுடைய மனத்தில் நிகழ்ந்தவற்றை அடியார்க்குநல்லார், " நாடகமகள் அரங்கேறக் கண்ட அரசன் அவள்மேற் காமக்குறிப்புடையணுதல் இயல்பு. அங்ங்னம் மாதவி ஆடல் பாடல் அழகு என்னும் இவை முதலிய கண்களிப்பப் கண்டும், செவிகளிப்பக் கேட்டும் நெஞ்சம் அழிந்து காமக் குறிப்பு மீது ரவும் நாம் இவளே வரையின் நகை பிறக்கும் என்பது கருதி வரையான் ஆயினன் ' என்று கூறுகின்ருர். இவ்வாறு பண்டைக் காலத்துத் தமிழ்மன்னர்கள் ஆடல் மகளிருடைய ஆடலிலும் பாடலிலும் ஈடுபடுவதை. விட அவர்களுடைய உடலிலேயே அதிகமாக ஈடுபட்டனர் என்று தெரிகிறது. அதற்கேற்ப ஆடல் மகளிராகிய விறலி. யரும் மிகுந்த எழிலுடையவர்களாக இருந்தனர். முடத்தாமக்கன்னியார் என்னும் சங்ககாலப் புலவர் தாம் இயற்றிய பொருநராற்றுப்படையில் விறலியின் அழகை அறல்போல் கூந்தல், பிறைபோல் திருதுதல், கொலேவிற் புருவத்துக், கொழுங்கடை மழைக்கண், இலவிதம் புரையும் இன்மொழித் துவர்வாய்ப், பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல் மயிர்குறை கருவி மாண்கடை யன்ன பூங்குறுை பூசம் பொறைசால் காதின், காண் அடச் சாய்ந்த கலங்கினர் எருத்தின் ஆடமைப் பணேத்தோள், அரிமயிர் முன்கை, கெடுவரை மிசைய காந்தள் மெல்விரல், கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர்,