உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பு -காட்சி-12: கும் பாழ்வில்கோவலன் மாதவி வீடு [பள்ளியறையில்...... மாதவி மாலை தொடுத்துக்கொண்டிருக் கிறாள்... கோவலன் அருகே அமர்ந்து அவள் விரல்களின் அசைவையே பார்த்துக்கொண் டிருக்கிறான்....... மாதவி, அவனைப் பார்த்து...] மாதவி: என்ன, விழி அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? கோவலன் : உன் விரல் அசைவைத்தான்!... காந்தள் விரல்களிலே நாட்டியம் தன் கலை யழகைக் காட்டுகின்ற விந்தையைத் தான் சுவைத்துக் கொண்டிருக்கிறேன்..... மாதவி! நாட்டியக் கலைக்கென்றே படைக்கப் பெற்ற வள் நீ !...... மாத: இல்லை!... உங்களுக்காகவே படைக் கப்பட்டவள் நான் !...... கோவ தவறு-தவறு. நீ படைக்கப்பட்ட வள் அல்ல !... உன்னை யாரும் படைக்க முடியாது!... தங்கநிற ஒளிகாட்டும் மேனி யிலே தவழ்கின்ற பேரழகை...... சேற் கெண்டை செவுள்போல நிறங்காட்டும் இதழ் களிலே ஊறுகின்ற பாலமுதை... கண்ணாடிப் பேழைக்குள் சிறைப்பட்ட கருவண்டு அலை வதுபோல் காட்சி தரும் விழியிரண்டை-கரு வுற்ற மேகம்போல் இருண்டு-கண்பறிக்கும் விதத்தினிலே சுருண்டு கால்வரையில் எட்டுகின்ற மயில் தோகைபோன்ற மழைக் கூந்தல் அழகை... தேனாற்றில் பலாச்சுளை போல் மிதக்கின்ற நாக்கில் படுகின்ற கார ணத்தால் சுவைபெற்றுச் சிந்துகின்ற மொழி வளத்தைப் படைப்பதற்குப் பாரினிலே யாரு மில்லை !.... உனைப் பார்த்துத்தான் இனி மேல் பாவையர்க்கு அழகைப் படைக்க வேண்டும் எனத் திட்டமிடுவான் படைப்புத் தலைவன் !... மாத: மன்னா !... மலர் எடுத்து மாலை தொடுப் பது சுலபம்! அதைவிடச் சுலபமாகத் தெரி கிறது ஒரு மங்கையைப் பார்த்து ஆடவர், வார்த்தைகளால் வர்ணனை தொடுப்பது!... கோவ: கண்ணே! உன்னை வர்ணிப்பதால் வார்த்தைகளுக்கல்லவா அழகு ஏற்படுகிறது! தமிழுக்கு அல்லவா பெருமை உண்டா கிறது! மாத: அதுபோல, உங்கள் கழுத்தில் இருப்ப தால் இந்த மாலைக்கும் பெருமை ஏற்படட் டும்!...... [மாலையை அவன் கழுத்தில் போடுகிறாள். கோவலன், பிறகு மாலையைக் கழற்றி மாதவி கழுத்தில் போடுகிறான். இருவரும் ஆனந்தம்.] 27