உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2013x திருந்திய கோவலன் திரும்பி வருதல் கண்ணகி வீடு [கண்ணகி, கோவலன் படத்தின் முன்னே நின்று— பலகணி வழியிலும் பல திசைகளிலும் பார்வையைச் செலுத்தி....இறுதியில் கத வண்டை வந்து நின்று...கதவைத் திறக்கிறாள். கதவு திறந்ததும் சேவல் ஒன்று உள்ளே வரு கிறது. கண்ணகி சேவலைப் பார்த்தவாறு நிற் கிருள்...அதனைத் தொடர்ந்து கோவலனும்... எதிர் வந்து நிற்கிறான்... கோவலனைக் கண்ட கண்ணகி அப்படியே அசைவற்று நின்று விடுகிறாள். கோவலனும் மெய்ம்மறந்து தலை குனிந்து நிற்கிறான். மரம்போல் நின்றுவிட்ட கண்ணகி... மண்டியிட்டு... கோவலன் காலில் தலை கவிழ்க் கிறாள். கண்ணீர்த் துளிகள் அவன் காலைக் குளிப்பாட்டுகின்றன. கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தி...] கோவலன்: விடு!... கண்ணகி...என்னை மன்னித்து கண்ணகி: அத்தான்!... [பொல பொலவென்று கண்ணீர் உதிர் கிறது] கோவ: கற்பின் திருவுருவாம் உனைவிடுத்துக் கணிகையின் மடியிலே சுகங் கண்ட... இந்தக் கல் நெஞ்சக் கயவனை; கற்றறிந்த மூர்க்கனை... கண் : ...திட்டாதீர்கள்!...என் கண வரை... என் கணவரேகூடத் திட்டக் கூடாது!... [அவன் வாயைப் பொத்தி] 440 கோவ: மாதர்குல் மாணிக்கமே! தமிழ் மறை காத்து...மனைகாக்கும் இன்பப் பெரு மாட்டி நீ யிருக்க...மா தவியாம் விலை மாதின் வசப்பட்டேன்.. அவள் வாச மலர்க் கூந்த லிலே வையகமே அடிமையென எண்ணி விட்டேன்...அந்த மோசம் நிறை மூதேவி என் குடும்பப் பாசம் அறுத்தாள். தேசமெல் லாம். தெருவெல்லாம் இகழ்ந்துரைக்க... தேகமிருந்தும் உயிரில்லாப் பாண்டமாக... என்னை ஆக்கிவிட்டாள்! கண்: அத்தான்! என் தங்கை அவள்! அவளை ஒன்றும் சொல்லாதீர்கள், அத்தான்! குழந்தை மணிமோலை சுகந்தானே?... அத்தான்!... கோவ: குழந்தை மணிமேகலை... குவிந் திருந்த பொன்மணிகள்; தங்கக் குன்று நீ... அணித்திருந்த நகைகள் எல்லாம்... கொட் டிக் கொட்டி... நான்பெற்ற இன்பத்தில் விளைந்ததன்றே அந்தக்குழந்தை! பாவச் இராசராசன் காசுகள். "பூம்புகார்" அகழ்வாராய்ச்சியில் கிடைத்த