உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சின்னம்!...விலைகொடுத்துச் சுவை பார்த்த காதல் விருந்தின் அடையாளம்! கணிகை வீட்டில் உன் கணவனுக்கு ஏற்பட்ட களங் கந்தான் கண்ணகி; அந்தக் குழந்தை! கண்: அய்யோ...அப்படியெல்லாம் சொல்லா தீர்கள்...மணிமேகலை மாதவிக்குப் பிறந்தா லும்...என் குழந்தை!...என் குழந்தையத் தான் மணிமேகலை! கோவ: என் தெய்வமே! நீ என் மதிப்புக் குரியவள்! மரியாதைக் குரியவள்! என்னை மன்னித்துவிடு...உன் இதயத்தை உணர முடியாத இந்த இழிமகனை மன்னித்துவிடு கண்ணகி... கண்: அத்தான்!... கோவ: கடல் வாணிபத்தில் தமிழருக்கு ஈடில்லை என்ற புகழ் என்னாலே பெருகிற்று... இன்றே...உடல் வாணிபத்தில் ஈடுபட்ட வாணிபத்தில் ஈடுபட்ட ஒருத்தியிடம்...அறிவிழந்தேன்; அளவிட முடியாத பொருளிழந்தேன்; புலம்புகின் றேன்... ஏழையாக!... [கண்ணகியிடம்] தொல்லை கொடுப்பதற்கு மனமே இல்லை! மார்க்கம் வேறு இருந்தால் சொல்! இல்லை யேல் மரணம் தான் மேல்! கண்: நானிருக்கும் வரையினிலே சோகத் தால் வாடாதீர்!...என் காற் சிலம்பு இரண்டு உண்டு; கழற்றித் தருகிறேன். விற்றுவிட் டால், புதிதாக வாணிபத்தைத் தொடங்க லாம் அத்தான்! கோவ: சிலம்பு ! சிலம்பை விற்பதா? அய்யோ ...கண்ணகி...இந்த வார்த்தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே... உன் காலை அழகு செய்யும் அந்தச் சிலம்புகளை... இந்தக் காமுகன் இதுவரை கழற்றாமல்... கடைசியாக விட்டு வைத்திருக்கும் அந்த ஆபரணத்தை... விற்றுவரச் சொல்லுகிறாயா? கண்ணகி! கண் : கவலைப்படாதீர்கள்...நான் சொல்வ தைக் கேளுங்கள்... தங்களுக்குப் பயனில்லா மல்... அழகுக்காக எனக்கு ஆபரணமா? விற்று வாருங்கள்! மீண்டும் நமக்கு நல்ல காலம் கட்டாயம் வரும்... சொல்வதைக் கேளுங்கள்...அத்தான்! என் செல்வமே!...பூம்புகார்ப் பெரு வணிகன் என்ற பெயர் போயிற்று...புயல்தனிலே கோவ: கேட்கிறேன்!...ஆனால் படகானோம்...கரையேற வழியில்லை...அலை மோதும் கடல் மாதா வயிற்றுக்குள் போய் விடுவோம். வா...வா... கண்: ஏன் கண்ணா அந்த முடிவு? ஆனை உயரம் அடுக்கி வைத்த தங்கம் உண்டு என் தாய் வீட்டில்...நாம் எடுத்துக் கொண்டால் தடை சொல்ல யாருண்டு?... கோவ: ஆருயிரே!... மாமன் கை பார்த்துப் பிழைக்கின்றான் என ஊர் பேசும்; மானம் போகும்!...வேண்டாம், வேண்டாம்! கண்: நெல் மணியை அளப்பது போன்று அளக்கின்றார் முத்துக்களை தங்கள் தந்தை, அவர்கூட ஆதரவு காட்டுவதற்கு மறுப் பாரோ அத்தான்?... கோவ: தனியாக வாழ்வதற்குத் தகுதியுண்டு என எண்ணிப் பொருள் கொடுத்தார் தந்தை! அதைத் தொலைத்துப் புதுத் பூம்புகாரி லேயே சிலம்பை விற்பது அவமான மல்லவா? கண்: பிறகு?... கோவ: நம்மை யாரும் அடையாளம் காண முடியாத பாண்டிய நாட்டுக்குச் செல்லலாம். அங்கே மதுரைத் தலை நகரில் சிலம்பு நல்ல விலைக்குப் போகும்! கண் : தங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்... மதுரைக்கு நானும் தங்களோடு வருகிறேன். கோவ: வா, இனிச் சாகும் வரையில் அணுப் பொழுதும் உனைப் பிரிய மாட்டேன் கண்ணகி! கண் : அத்தான்! கோவ: இன்றைக்கே யாருக்கும் தெரியாமல் புறப்பட வேண்டும்.. பயணம் தயார் செய் வோம்!