உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி பொறுத்திருந்து காத்தது வீண்போகவில்லை! இதோ-கோவலன் மீண்டும் அவளிடம் வருகிறான்; இன்பவாழ்வைக் காண- இல்லம் காண ! மீண்டும் அவர்கள் இல்லம் ஒளிபெறும்; மகிழ்ச்சி துள்ளும் ! மீண்டும் மகிழ்ச்சிப் பிணைப்பும்; இணைப்பும்; இனிமைச் சிரிப்பும் தோன்றும்; ஒளியிழந்து கிடந்த மாளிகையில் இருளும், மிரளும் தனிமையும் சூழ்ந்த மாளிகையில் மீண்டும் ஒளி ! - இதோ கோவலன் வந்துவிட்டான்-காதல் எனும் மணி விளக்கேற்ற! கண்ணீர் இனித் தேவையில்லை கண்ணகி! கடும் வேதனை இனியில்லை! புன் சிரிப்புக்காட்டு; புவிமகிழச் சிரித்திடு! ஆனந்தம் மேலிட - ஆடிடு நடனம்! யாரை நீ இழந்தாயோ- - நீ பெற்றுவிட்டாய்! அவனை கொடுமையில் இனியும் நீ இருக்கவேண்டியதில்லை. இதோ கோவலன். தனிமையில் - வந்துவிட்டான் - - இத்தகைய நம்பிக்கையோடும் நல்லுணர்வோடும் - ஏன் - களிப்பிலும் கோவலனின் வருகையை நாம் வரவேற்கிறோம். ஆனால்...! ஆனந்தக் புகழ்மிகு புலவராம் இளங்கோவடிகள் நம்மையும் - கண்ணகி கோவலனையும் - மகிழ்ச்சி திரும்பிய புது வாழ்விற்கு இட்டுச் செல்லவில்லை. ரத்தக் கண்ணீர் வடிக்கும் காட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோவலன் தலை கொய்யப்பட்டபோது கடுங்கோபம் கொண்டெழுந்த கண்ணகியைச் சித்தரித்த கருணாநிதி, உணர்ச்சி இமயத்திற்கு மேலும் மேலும் எழுகிறார். எந்தப் பெண் தான்-தன் கணவனின் சாவைத் தாங்கிடமுடியும்? எந்தப் பெண் தான்-தன் கொழுநனுக்கு இழைத்திட்ட கொடுமையை-இழிவைத் தாங்கிடமுடியும்? இதோ- கோவலன் தலையிழந்து-தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு-அவசரத்தில் நீதி வழங்கப்பட்டு-கல்லாக்களிமகன் ஒருவனால் கொல்லப்பட்டுக் கிடக்கிறான். ஆனால், ஆதரவற்ற ஒரு பெண்ணான கண்ணகியால் என்ன செய்யமுடியும்? இச்செயலுக்கு அரசர்குடிப் பிறந்த மன்னனே பொறுப்பு! செயல் தவறானது; ஆனால் செய்தவன் சாதாரண மனிதனல்ல ; கடும் வலியும்- கற்றறிந்த நெஞ்சுஞ் கொண்ட பாண்டியன் உத்திரவிட்டு நிகழ்ந்த செயல் இது ! ஏன்? எப்படி? இக்கேள்விகள் கண்ணகி முன் எழுந்தன; அவளது கோபக்கனல் அனைவரையும் உலுக்கிவிடுகிறது! அவள், இழந்ததை மறுத்தாள்! நினைத்து வருந்திட - வாளாயிருக்க கோவலன் மீது பழிப் பெயர் ஏறிட அனுமதிக்க மறுத்தாள்! "இல்லை! இல்லை! இந் நிலத்தில் நீதி நிலைத்திட வேண்டும்! நீதி-அதை நான்பெற்றே தீருவேன்!" இடி முழக்கமென முழங்கினாள். கொலு மண்டபம் நோக்கி நடைபோட்டாள், நீதி கேட்டுப் பெற!