உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கண்ணகி! மிகு தனது வாதங்களை முன் வைத்தாள் அவளது எழுச்சி பேச்சையும் - எச்சரிக்கையையும் மு.க. எடுத்துரைக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. கண்ணகியோடு தாமும் சேர்ந்து அவள் காட்டும் சினத்திலும் - பழிப்பிலும், குற்றம் சாட்டுதலிலும், எழுச்சியிலும் பங்கு கொண்டு பாராளும் மன்னன் முன் வாதாட வேண்டும் என்ற உணர்வை உள்ளத்து எழுச்சியை அந்தக் காட்சி உருவாக்கி விடுகிறது. வெடிக்கிறது எரிமலை - கொந்தளிக்கிறது கடல் - கூந்தல் மலர் இழந்த கைம் பெண் நீதி தேவதையாக மாறுகிறாள். "மன்னனா! நீ ? ஏ! பாண்டியனே ! மன்னனும் நீயல்ல; வளநாடும் உன்னுடையதல்ல!" -என்று முழங்குகிறாள் பத்தினித் தெய்வம். அனைத்தும் அடங்கி - ஆத்திரம் வெளிப்படுகிறது! இத்தகு காட்சியை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல! ஆனால் கருணாநிதி யாரையும் விஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார், தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு எழுத்தாளர் என்பதால்! "பேசுங்கள் - கொவ்வைக் கனிவாய் திறந்து பேசுங்கள் அத்தான். ஒருமுறை பேசுங்கள் அத்தான். உங்கள் கண்ணகி வந்திருக்கிறேன் பேசுங்கள். அத்தான் பேசுங்கள்- உங்கள் கண்ணகி வந்திருக்கிறேன் ! ” - கண்ணீர் கடலென ஓட அவள் புலம்புகிறாள், புலம்புகிறாள்! ஆனால் பதில் ஏதும் இல்லை! கோவலன் கூடாகி விட்டான். "நீங்கள் பேசவேண்டாம்! உங்களுக்காக இந்த உலகத்தையே பேசச் செய்கிறேன்." - என்று கூறிய கண்ணகி உலகத்தையே பேசவைத்தாள்; அவள் காலத்து உலகை மட்டுமல்ல; நிகழப்போகும் காலத்து உலகை யெல்லாம் பேசவைத்தாள்! நூல் முழுவதும் கருணாநிதி, ஒரு காவியப் படைப்பிற்குத் தேவையான செழுஞ் சொல்லோட்டத்தை - சீரிய - அழகு அமைப்பை உருவாக்கித் தருகிறார். - மு. கருணாநிதியின் இந் நாடகமே ஒரு சிலம்பு! இளங்கோவடிகளின் தங்கம் அதில் இருக்கிறது, இந்தப் புகழ்மிக்க எழுத்தாளரின் (கருணாநிதியின்) ஆற்றலும் இதில் அபரிமிதமான அளவுக்கு இருக்கிறது. கடந்த கருத்தமைதி கொண்டது. அதன் சிலப்பதிகாரம் -காலத்தையும் கடந்த போதனை - தமிழ்நாட்டில் மட்டும் முடங்கிக்கிடப்பதல்ல! அது - வையகம் முழுமைக்கும் உரிய பாடம்! இத்தகைய உயர்த்த தரமுள்ள காவியம், உலகமா காவியங்களில் ஒன்றெனக் கருதப்பட வேண்டும்.