உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை: நாங்களெல்லாம் குர வைக் கூத்து நடத்தப் போகி றோம்... அதை அண்ணி பார்க்க வேண்டுமென்று எனக் கும் என் தோழிகளுக்கும் ஆசை! கோவ: கண்ணகி என்னோடு வருவதா யில்லை யம்மா! நான் மாத்திரமே தலைநகருக்குப் போகிறேன். உங்கள் குரவைக் கூத்தைக் குதூகலமாக நடத்துங்கள்! ஐயை: சரியண்ணா! அண்ணி! தயாராக இருங்கள்; கொஞ்ச நேரத்தில் வருகிறோம், அழைக்க! (கண்ணகி தலையசைக்க, ஐயை போய் விடுகிறாள்.) கோவ: கண்ணகி! நான் தலைநகருக்குப் புறப்படுகிறேன்! கண்: இதோ! (என்று சிலம்புகளைக் கழற்றப் பார்க்கிறாள். தடுத்து] கோவ: வேண்டாம் கண்ணகி! அய்யோ... நீ சிலம்பில் கைவைப்பது என் தலையைத் துண்டிப்பது போல் இருக்கிறது! கண்: நான் சொல்வதைக் கேட்க மாட்டீர் களா அத்தான்? நாம் ஆரம்பிக்கும் வாணிபம் வளரத் தொடங்கிவிட்டால் இதுபோல் எத்தனையோ சிலம்பு வாங்கிக்கொள்ளலாம்! (என்று கழற்றப் போகிறாள்] கோவ: இரு இரு கண்ணகி! சிலம்புகள் உன் காலில் இருக்கும் போதே ஒரு முறை நடந்து காட்டு! அந்தக் காட்சியைக் கடை சித் தடவையாக நான் பார்த்துக் களிக் கிறேன். கண்: அத்தான்? கோவ: ஆமாம் கண்ணகி! சிலம்பை விற்று விட்டால் பிறகு அந்தக் காட்சியைக் காண முடியுமா? எங்கே, நட! நட கண்ணே! [கண்ணகி கண்களில் நீர்!] [நடக்கிறாள்] [கோவலன் கண்கள் குளமாகின்றன] கண் : அத்தான்! என்னென்னவோ சொல்கிறீர் கள், எனக்குப் பயமாயிருக் கிறது! அழுதவாறு தழுவிக் கொள் ளுதல்] கோவ: பயப்படாதே கண்ணகி! நமக்கு நல்ல காலம் வருமென்று நீதானே எனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய்? [தழுதழுத்த குரலில்] கண்: கட்டாயம் நல்லகாலம் வருமத்தான்... வரும்! கோவ: சரி, நேரமாகிறது! [கண்ணகி ஒரு சிலம்பைக் கழற்றிவிட்டு, இன்னொன்றைக் கழற்றப் போகும்போது] கோவ: கண்ணகி இரண்டையும் விற்க வேண்டாம்! ஒன்றை மாத்திரம் கொடு! கண் : ஒன்று மட்டுமா? கோவ: ஆமாம்; ஒரு சிலம்பு உன் காலிலேயே இருக்கட்டும்! அந்த ஒற்றைச் சிலம்பு ஒலி யெழுப்பும் போதெல்லாம்... உத்தமியாம் உனக்குக் கேடு நினைத்த இந்த உன்மத்தனின் உள்ளத்திலே ஆயிரமாயிரம் சம்மட்டியடிகள் விழுந்து கொண்டே யிருக் கட்டும்! அற்பனே! அறிவற்ற பதரே! ஆவிநிகர் மனையாளை ஆலையிட்ட கரும்பாக்கி, அணு அணுவாய்ச் சித்ரவதை செய்திட்ட கொடும் பாவி! கொலைகாரா! என்றெல்லாம் அந்த ஒற்றைச் சிலம்பு என்மீது கவி பாடட்டும்; அதைப் புவி கேட்கட்டும். இந்தப் புன்மதி யாளனுக்கு அப்போதாவது புத்தி வரட்டும்; கண்ணகி, புத்தி வரட்டும்! கண்: அத்தான்! உங்கள் நீல விழி சிந்து கின்ற நீர்த்துளியால் கோலமுகம் நனைவ தற்கோ பாவி நான் வழி சொன்னேன்? கவலைப் படாதீர்கள் அத்தான்! நம்பிக்கை நிறைந்த எதிர்காலம் நம்மை நோக்கி ஒளி விடுகிறது. கோவ: நான் போய் வரவா கண்ணே! கண் [தன் கண்களையும் அவன் கண்களை யும் துடைத்துவிட்டு] எங்கே! கவலைப்படாமல்,