பக்கம்:சிலம்பின் கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18. துன்பச் செய்தி
(துன்ப மாலை)

குரவை பாடி முடிந்தது. பின் மாதரிவையை ஆற்றின் நீர்த்துறைக்குச் சென்று நீராடித் திருமாலுக்குப் பூவும், சந்தனமும், நறும் புகையும், மாலையும் சாத்தச் சென்றிருந்தாள். அந்த நேரத்தில் அவள் ஆயர் சேரியில் இருக்கவில்லை.

குரவைக்கூத்து முடிந்ததும் அலறிஅடித்துக் கொண்டு ஊரில் இருந்து ஒருத்தி அங்கு வந்து செய்தி கூறத் தொடங்கினாள். அவள் அச்செய்தியைச் சொல்ல முடி யாமல் தயங்கினாள். அவள் வாயில் சொற்கள் வெளிவர வில்லை.

கண்ணகிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ துயரச் செய்தி அவள் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை மட்டும் அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. இவள் பதறினாள்; கதறினாள்; அதிர்ச்சியுற்றாள். ஐயையை நோக்கி ஐயத்தை எழுப்பினாள்; “நடந்தது யாது?” என்று வினவினாள்.

“ஊருக்குச் சென்ற காதலன் என்ன ஆயினான்? அவன் வந்திலன்; என் நெஞ்சம் கவல்கின்றது; யாரோ ஏதோ கூறினார்கள்; அவர்கள் சொல்ல வந்த செய்தி யாது?" என்று ஐயையை வினவினாள்.

“நண்பகல் பொழுதே எனக்கு ஐயம் தோன்றியது; நடுங்கினேன்; என்ன? ஏது? அவர்கள் கூறியது யாது? விரைவில் கூறுக” என்று மேலும் பதறினாள்.

“யாரோ எவரோ வஞ்சம் இழைத்துவிட்டார்கள்; சூழ்ச்சிக்கு அவர் இரையாகி விட்டாரா? ஒன்றும் விளங்க வில்லை. அந்த ஊரவர் பேசிய உரை யாது? விளம்புக;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/119&oldid=936436" இலிருந்து மீள்விக்கப்பட்டது