பக்கம்:சிலம்பின் கதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரை காதை

135



“பாண்டியர்கள் நெறி தவறாதவர்கள்; மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்; அத்தகைய மரபு அது”,

“அவர்களுள் ஒருவன் தவறு செய்யச் சூழ்நிலை இடம் தந்தது. காவல் காக்கும் வேந்தன் ஆவல் காரணமாகக் கீரந்தை என்பானின் மனைவி உள்ளே தனித்து இருக்க அவ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். நள்ளிரவு; காவல் செய்வது அரசன் கடமை'தவறி விட்டான்.”

“பார்ப்பணி அவள் உள் இருந்து, மன்னவன் காவல் காக்கும்; கவலை கொள்ளாதே என்று கணவன் சொல்லிப் போன சொற்களை அவன் செவி சுடும் வண்ணம் வாய்விட்டுக் கூவிக் குரல் எழுப்பினாள்."

“தான் செய்த தவறு உணர்ந்து மன்னன் தன் அவையில் தானே தனக்குத் தீர்ப்பு வழங்கிக் கொண்டான். அவையில் தன் கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான். பொற்கை ஒன்றைப் பொய்க்கையாக வைத்துக் கொண் டான். ஒரு காலத்தில் இந்திரன் மீது படைஎடுத்து அவன் முடியைக் களைந்த மாமன்னன் அவன் வெற்றி தேடிய அந்தக் கை இப்பொழுது வெறுமை நிலை உற்றது. தவறு செய்தால் பாண்டியர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்கள்; இது மரபு வழி நிகழ்ச்சி”

பாண்டியன் நெடுஞ்செழியன்

“அத்தகைய மரபில் வந்தவன் பாண்டியன் நெடுஞ் செழியன் அவனும் ஒரு முறை அவசரப்பட்டுத் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டான். அது தவறு என்று தெரிந்ததும் தன்னைத் திருத்திக் கொண்டான்; தவறு செய்தது அவன் எதிர்பாராதது; உடனே அதை உணர்ந்து திருத்திக் கொன்டான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/136&oldid=936455" இலிருந்து மீள்விக்கப்பட்டது