பக்கம்:சிலம்பின் கதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிக் காதை

149



ஆகும். வாழ்க்கை சிறந்த குறிக்கோள் கொண்டது. அத்தகைய குறிக்கோள் அற்றவர் வாழ்ந்து என்ன பயன்? முதியவர்கள் பலர் மண்ணில் மறைந்துவிட்டனர். அவர்கள் உணர்த்துவது யாது? வாழ்க்கை நிலையற்றது என்பது அறியத்தக்கது ஆகும்; அந் நிலையாமை அறத்தை நூல்கள் காட்டத் தேவை இல்லை. என் வாள் அவர்களுக்குக் காட்டும்; வாழ்க்கை நிலையற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள்.”

“அவர்களை உணர வைப்பது உறுதி; மகளை மறுத்தவன் இமய அரசன் பார்வதி அவளைப் பரமசிவன் வீரம் காட்டி மணந்தான். அவனைப் பணிய வைத்தான்; அது மகட்பால் காஞ்சி என்பர் மற்றும் எம்முன்னவர் இமயம் சென்று விற்கொடியைப் பொறித்த நாள் எதிர்த்த மன்னர் எரி சாம்பல் ஆயினர்; இது வரலாறு கற்பித்த பாடம் ஆகும். காஞ்சித் திணையை அவர்கள் உணர்ந்தனர். ஒழிந்தோர் மற்றவர்க்குக் காட்டிய பொதுக்காஞ்சி, மகட் பால் காஞ்சி, நீள்மொழிக் காஞ்சி ஆகிய இம்மூன்று காஞ்சிகளையும் காண நேரிடும்.

“பகைவர்கள் காஞ்சி காண்பர்; யாம் வஞ்சி சூடுவோம்” என்று சேரன் வஞ்சினம் மொழிந்தான். வஞ்சித் துறைகளுள் வெற்றிச் சிறப்பைக் கூறவது 'நெடுமாராய வஞ்சி'; வெற்றி கொண்ட பிறகு பகைவர் நாட்டைக் கொளுத்தி, அழித்தல் 'வென்றோர் வஞ்சி' எனப்பட்டது. வீரர்க்குச் சோறு தருவது 'பெருஞ்சோற்று வஞ்சி'; பகைவர் நாடு அழிவதற்கு மனம் அழிவது 'கொற்ற வள்ளை'; இவற்றைத் தான் விளைவிப்பதாகக் கூறினான். பனை மாலை அவனுக்கு உரிய சிறப்பு மாலை; “அதனையும், வஞ்சி மாலையும் சூடிக் கொண்டு போர் தொடுப்போம்” என்று வஞ்சி நாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/150&oldid=936470" இலிருந்து மீள்விக்கப்பட்டது