பக்கம்:சிலம்பின் கதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

சிலம்பின் கதை



வாழ்க்கை நடத்திய பின் தன் தெய்வ உருவை அவளுக்குக் காட்டிக் கோயிலுள் சென்று மறைந்துவிட்டான்.”

“அந்தச் சாத்தன்தான் மாடலனிடம் மங்கலாதேவி கோயிலின் முன் சென்று இருந்தபோது அந்தண வடிவத்தில் வந்து இந்த நீர்க் கமண்டலத்தைத் தந்து சென்றான்” என்ற செய்தியை விளக்கினான். அந்த நீரின் இயல்பையும் விளக்கிக் கூறிச் சென்றதாகவும் கூறினான். “அவன்தான் இன்று இந்தப் பார்ப்பணியாகிய தேவந்திமேல் தோன்றி இச்செய்தியைக் கூறினான்” என்று மேலும் விளக்கினான்.

பழம் பிறப்பு அறிவித்தல்

நீரைத் தெளித்துக் காண்போம் என்று தெரிவித்து விட்டு அந்த மூன்று பெண்களின் மீதும் கரகத்தில் இருந்த சுனை நீரை மாடலன் தெளித்தான்.

பழம் பிறப்பு உணர்வு பெற்ற அரட்டன் செட்டி மகளிருள் ஒருத்தி கண்ணகியின் தாயாக இருந்து தன்துயரை வெளிப்படுத்தினாள். காதலன் தன்னொடும் சென்று கடுந்துயர் உழந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள். அடுத்தவள் கோவலனின் தாய் நிலையில் இருந்து தன் துயரை வெளிப்படுத்தினாள். “இலங்கிழை நங்கை தன்னோடு இடையிருளில் தனித்துயர் உழந்து சென்றாய், அதனை நினைத்துப் புலம்புகின்றேன்; என் மகனே வருக!” என்று அழுது புலம்பினாள்.

மாதரி கோயில் அர்ச்சகரின் மகளாகப் பிறந்திருந்தாள். அவள் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள். “வைகை நதியில் நீராடச் சென்றிருந்தேன்; வந்து விசாரித்தேன்; வீட்டில் உன்னைக் காணேன் எங்கு ஒளித்தாய்? அருமை ஐயா! இளையவனே! நீ எங்கே?” என்று கூறி வாய்விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/181&oldid=936502" இலிருந்து மீள்விக்கப்பட்டது