பக்கம்:சிலம்பின் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சிலம்பின் கதை



பட்டினப் பாக்கம்

அடுத்தது பட்டினப்பாக்கம்; உயர்நிலை மாந்தர் வசித்த பகுதி இது. அரசவிதி, தேர்விதி, கடைத்தெரு, வணிகர் தெரு, அந்தணர் அக்கிரகாரம், உழவர் இல்லம், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் ஆகிய இவர்கள் தனித்தனியே வசித்து வந்தனர்.

காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் இவர்கள் எல்லாம் ஒருபகுதியில் வாழ்ந்தனர்.

அரசன் அரண்மனையைச் சுற்றிப் படை வீரர்கள் குடியிருப்புகள் இருந்தன. யானை, குதிரை, தேர், காலாள் வீரர்கள் இங்குக் குடி இருந்தனர். இப்பகுதி கடற்கரையை ஒட்டி இருந்தமையால் இது பட்டினப்பாக்கம் எனப் பட்டது. முன்னது ஊர் எனப்பட்டது; இது பட்டினம் என்று பாகுபடுத்திக் காட்டப்பட்டது. இதை வைத்துத்தான் புகார் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. இதற்குப் பூம்புகார் என்றும், பூம்பட்டினம் என்றும் இருவேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

பலிக் கொடை

இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட மையப் பகுதியே சிறப்பு மிக்கதாக விளங்கியது. கடைகள் மிக்குள்ள பகுதி, பகலில் செயல்பட்டது; இது நாளங்காடி எனப்பட்டது. இங்கு எப்பொழுதும் விற்பவர் ஓசையும், வாங்குவோர் ஓசையும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

மரங்களின் அடிப்பகுதியே இவர்கள் கடைகளுக்குத் தூண்களாக விளங்கின; சோலைகள் மிக்க பகுதி அது என்று தெரிகிறது; இங்கே காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/27&oldid=959700" இலிருந்து மீள்விக்கப்பட்டது